பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

甘03 令 (வல்லிக்கண்ணனின்மனியான கதைகள்) வரையிலே ஊர்க்காரங்க மறக்கமுடியாதபடி, நினைச்சு நினைச்சுப் பேசக்கூடிய வகையிலே, ஒரு ஆட்டம் ஆடிக் காட்டுகிறேன்.' வெறி நிலையிலே கன்னத்து உட்சதையைக் கடிச்சு ரத்தம் உண்டாக்கி, அந்த ரத்தத்தை உதடுகளின் ஒரமாக வழியும்படி கொண்டுவந்து, உதட்டிலும் தடவிக்கொண்டு, சாமி ஆடிக் காட்டலேன்னு சொன்னால், என் பேரு ஆவு இல்லே! என்று நெஞ்சோடு கிளத்தி வந்தாள் அவள். 'தர்மகர்த்தாப் பிள்ளை' என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த 'எல்லைக்கியா பிள்ளை என்கிற எல்லைக்கு நாதபிள்ளை அவர்கள் வீட்டில் தெய்வத்துக்குப் படைக்க ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். அவருக்கு உறவினர்கள் அதிகம். விசேஷத்துக்கு ரொம்பப் பேர் வருவார்கள்; அதனால் அங்கேயே தனது ரிக்கார்டு பிரேக்கிங் சாமி ஆட்டத்தை நடத்திக் காட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள் ஆச்சி. எப்படி எப்படிச் செய்யனும், கவனிப்பும், ஆரவாரமும் எவ்விதம் இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து, தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் அவள். முந்திய தினம் தனக்கு அழைப்பு வந்துவிடும் என்று நம்பினாள் ஆச்சி. ஆனால் யாரும் அவளைக் கூப்பிடவில்லை. உன்னைக் கூப்பிடாமலா இருப்பாங்க? நாளைக்கு பர்வதம் தானே வந்து நேரில் அழைத்துப் போகலாம் என எண்ணியிருப்பாள் என்று பக்கத்து வீட்டுக் காரிகள் சொன்னார்கள். இருப்பினும், ஆச்சிக்கு வருத்தம் தான. மறுநாளும் வந்தது. ஆடிச் செவ்வாய், ஆவு ஆச்சி குளித்து, திருநீறு இட்டுக்கொண்டு, பூசை நியமங்களை அவசரம் அவசரமாக முடித்து விட்டுக் காத்திருந்தாள். நேரமோ ஓடு ஒடு என்று ஓடியது. பத்து-பத்தரைபதினொன்று-பதினொன்றே முக்கால் ஆச்சு. பன்னிரண்டு. பன்னிரண்டரை!