பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 & . | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் போய்விட்டார்கள். அது அவனுக்குக் கொஞ்சம் வருத்தம் அளிக்கத்தான் செய்தது. ரத்னசாமி ரசிகர் மட்டுமல்ல; சிறந்த போர் கூட என்பதை சிவப்பிரகாசம் சீக்கிரமே உணர்ந்துகொண்டான். 'பொதுவாகவே, ரசிகர்-நல்ல பிரசங்கி - என்று பெயரெடுத்தவர்கள் சரியான போர் ஆகவும் இருப்பார்கள் போலும் இவ்வாறு எண்ணிக்கொண்டான் அவன். இலக்கிய நயங்கள் சிலவற்றை எடுத்துச் சொன்னார் ரத்னசாமி. வியந்து பாராட்டினார். பிறகும் வியந்து ஆகாகா! என்று சொல்லவேணும் என எதிர்பார்த்தார். சிவப்பிரகாசம் அவருக்கு ஏமாற்றமே அளித்தான். நண்பர் ஒரு மாதிரி இவருக்கு உயர்வு நவிற்சி, கற்பனை என்பதெல்லாம் பிடிக்காது. கவிஞர்கள், அதிகமாக அளப்பவர்கள் என்பது இவருடைய அபிப்பிராயம் என்று சுந்தரமூர்த்தி சொன்னார். 'அடேடே! அப்படியா விஷயம்? என ஆச்சரியப் பட்டார் ரசிகர். நீங்கள் அடிக்கடி இங்கே வாருங்கள். உங்கள் மனோபாவம் தானாகவே மாறிவிடுகிறதா இல்லையா, பாருங்கள்!' என்று கூறினார் அவர். சுந்தரமூர்த்தியும் சிவப்பிரகாசமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். அப்பொழுது சிவத்தின் கண்கள் தாமாகவே சுற்றிச் சுழன்றன. அழகு முகங்கள் பார்வை வீச்சிலே படாதா என்று. ஏமாறவில்லை அவன், அவ்விருவரும் மறைவிலிருந்து முன் வந்து நின்றார்கள்; மோகன முறுவலோடும் குளிர் நிலவுப் பார்வையோடும் வழி அனுப்பி வைத்தார்கள். அடிக்கடி வாருங்கள். மிஸ்டர் சிவப்பிரகாசம்! நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் ரத்னசாமி,