பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஹ, ஹ, சிவப்பிரகாசம்: அன்று நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் சுந்தரகாண்டம் வேனும் என்று கேட்ட போது நான் என்ன சொன்னேன்? உங்களுக்குச் சீக்கிரமே கல்யாணம் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறதோ என்று கேட்டேனா இல்லையா? எனது வாக்கு பலித்து விட்டது பார்த்தீர்களா? என்று சொன்னார் ரத்னசாமி. 'நான் படிப்பதற்காக அந்தப் புத்தகத்தைக் கேட்கவில்லையே! என்று முணுமுணுத்தான் சிவம். அதனால் என்ன! நடக்க வேண்டியது எப்படியோ சுகமாக நடைபெற்று விட்டது அல்லவா? காலம் முன்வந்து உதவி புரிந்தது; திருவருள் கூட்டுவித்தது என்று கொள்வோமே! என்று சுந்தரமூர்த்தி சொன்னதை மற்ற இருவரும் ஆமோதித்தனர். சாந்தா சிவப்பிரகாசத்தின் துணைவியாக வருவதற்கு முன்னரே அவனுடைய மனப்பண்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தது. அவளை மனைவியாக அடைந்த பிறகு அந்த மாற்றம் அதி தீவிரமாக அமைந்தது. அவளைப் பார்க்கிறபோதெல்லாம், அவளுடன் பழகும் போதெல்லாம், அவள் பேச்சைக் கேட்கிற போதெல்லாம் அவன், தன்னை மறந்த லயந் தன்னில்’ ஆழ்ந்துவிட நேர்ந்தது. - இங்கே நீங்கள் அடிக்கடி வந்துபோனால் உங்கள் மனப் பண்பு தானாகவே மாறிவிடும் என்று எங்கள் அப்பா சொன்னார்களே. அது சரியாகிவிட்டது. இல்லையா? என்று ஒருநாள் சாந்தா அவனிடம் கேட்டாள். 'சாந்தா, நீ சாதாரண அழகி இல்லை. தேவலோகத் திலிருந்து ஒரு சுந்தரி வந்தால் அவள் எப்படி இருப்பாள்