பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岭 131 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் என்னடீ அர்த்தம் ? என்று கேட்டாள். 'நான் என்னத்தைக் கண்டேன்? என்று கையை விரித்தாள் மகள். - பின்னே இப்போ சொன்னியே? . ஆமா. அன்னைக்கு தெருவிலே மூணு பேரு கத்திக் கூப்பாடு போட்டுக்கிட்டுப் போன்ாங்க. ஒருத்தன் இன்னொருத்தனைப் பார்த்து நீ மாங்கா மடையண்டாசரியான மாங்கா மடையன் அப்படீன்னான். அது கத்துக்கிட வேண்டிய வார்த்தையாகத் தோணிச்சு, தெரிஞ்சு கிட்டேன். இப்ப அதை உபயோகிக்கனும் போலிருந்தது. சொன்னேன். நீ என்னமோ பெர்சா முஞ்சியை வச்சுகிட்டு உர் உர்ருனு வாறியே! என்று ಸಿ] மகள். - அம்மா குரலைக் கடுமையாக்கிக் கொண்டு, “ஏ பத்மா, வர வர நீ ரொம்பவும் கெட்டுப் போகிறே. உன்னை இப்படியே விட்டுவிடுறது நல்லதில்லைன்னு தோணுது' என்றாள். பத்மா உம்ம்' என்று, பன்றிக் குட்டி மாதிரி, உறுமினாள். - - அது சரி. அந்தப் பையனை ஏண்டி மடையன்னு சொன்னே என்று கேட்டாள் தாய். 'எந்தப் பையனை' என்று தாயின் முகம் பார்த்துக் கேட்டாள் சிறுமி. கஸ்பியான்காவைத் தான். வேறேயாரை: பின்னே அவனை வேறே எப்படி அம்மா சொல்றது?. அடே பையா, கப்பலிலே தீ புடிச்சுட்டுதுடா, இங்கேயே நின்னால் செத்துப்போவேடா, ஒடியே போயிடுவிேர்ம்; உங்க அப்பா இனிமே வரமாட்டாருடா, அவரு செத்தே போனாருன்னு எவ்வளவு தரம் சொல்லியிருக்கிறாங்க. அப்படி இருந்தும் அந்தப் பையன்-ஊகுங் நான் இங்கேயே தான் ற் பேன்; எங்க அப்பா சொல் லிவிட்டு ப் போயிருக்கார் அப்படின்னு சாதிச்சிருக்கிறானே. அது மடத்தனம் இல்லையா? முட்டாள் தனம்-அசட்டுத்தனம்பைத்தியக்கர்த்தனம் எல்லாம்தான். ஆமா நான் அப்படித் தான் சொல்லுவேன். அவன் மோறையும் மூஞ்சியும் ! வவ்வவ்வே! என்று கத்திவிட்டு எழுந்தோடினாள் பத்மா. போக்கிரிக் கழுதை! என்ற தாயின் குரலில் இபருமை தொனித்தது. இருந்தாலும் இந்தக் குழந்தைக்கு இத்தனை அசுர மூளை காதம்மா! வாயி வாயி! என்ன வாயி என்று அலுத்துக்கொண்டது அவள் உள்ளம். . క్ష్వి