பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s శj}&స్త్ర யெழுத்து) தான் பெரிய தவறு செய்துவிட்டதாக எண்ணினான் பாலகிருஷ்ணன். சரியாகச் சொன்னால் இரண்டு தவறுகள் என்று சொல்ல வேண்டும் என்று அவனுடைய மனக்குரல் முனகியது. நான் இந்த விழாவுக்கு வந்திருக்கவே கூடாது' என்று அவன் நினைத்தான், கலைக் கழகம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வர்கள் அவனை வருந்தி வருந்தி அழைத்திருந்தார்கள். அப்படியிருந்தும், அங்கு வராமலே இருந்துவிடலாம்; அப்புறம் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டால் போகிறது என்று அவன் மனம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அவனுடைய பண்புகளை நன்கு அறிந்து வைத்திருந்த கழகச் செயலாளர் விடாக்கண்டனாக நடந்து கொண்டார். விழா நேரத்துக்கு முந்தியே ஒரு ஆள் அனுப்பினார். கடைசி நிமிஷத்தில் அவரே ஆஜராகி என்ன ஸார், இன்னுமா கிளம்பவில்லை? என்று சிரிப்பாணியோடு கேள்விகளை தொடுத்தார். அதற்கு மேலும் அவன் எப்படி தட்டிக்கழிக்க முடியும்? - ஆகவே பாலகிருஷ்ணன் கலைக்கழக ஆண்டு விழாவுக்கு வரவேண்டியது அவசியமாகியது. சரி, வந்ததுதான் வந்தோம். தொலைந்து போகிறது. இங்கே கூட்டத்தின் முன்னால் மேடை மீது பேசாமலாவது இருந்திருக்கலாம் என்று அவன் நினைத்தான். விழாக் கூட்டத்தில்-பொதுவாக எந்தக் கூட்டத்திலுமேஅவன் பேச விரும்புவதில்லை. கலைக்கழக ஆண்டு விழா வின்போது பேச வேண்டும் என்று செயலாளர் ராமநாதன்