பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்து : & #48 கையெழுத்தோடு சிந்தனை முத்தும் இருந்தால் நல்லது இல்லையா? என்று ராஜம் வினவினாள்.

ද්‍රි 'பரவாயில்லையே! பெண்கள் முன்னுக்கு வந்து கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது என்று அவன் மனக் குறளி குறிப்பிட்டது. பேசுவதும் ஒரு கலைதான். அதற்காக மனிதன் சதா பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. எப்பொழுதும் எல்லோரும் பேசுவது கலையாகிவிட முடியாது என்று எழுதிக் கையெழுத்திட்டு அவளிடம் நோட்டைக் கொடுத்தான் அவன். . . . . மிக்க நன்றி என்று கூறி, மிகுந்த முக மலர்ச்சியோடு ராஜம் அதை வாங்கிக் கொண்டாள். : . . " எனக்கு நீங்கள் எதுவும் எழுதவில்லையே. எனக்கும் ஏதாவது எழுதித் தரணும். ஆமா என்று சொல்லி, மற்றவள் தனது புத்தகத்தை அவசரமாக நீட்டினாள். அவள் செயல் அவனுக்கு சிரிப்பை தந்தது. சின்ன விஷயங்களில் கூடபோட்டி போடுகிற சிறுபிள்ளைத்தனம் இவளிடமும் இருக்கிறதே என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவன் புன்னகையோடு நோட்ட்ை ஏற்றுக் கொண்டான். அதன் தாள்களைப் புரட்டிப் பார்த்தான். பிறகு எழுதினான். அவன் முன்பு கையெழுத்திட்டிருந்த பக்கத்தில் நிறையவே இடம் இருந்தது. அங்குதான் அவன் எழுதினான்: மனம் நிறைந்த சிரிப்பு வீட்டை ஒளியுறுத்தும் கதிரொளி என்பது வசனம். சிரிப்பு கவலை இருளை நீக்கும் ஒளி ஆகும். முகத்துக்கு அழகு சேர்க்கும் அழகு அது: இதை எழுதிவிட்டு அவன் அவள் முகத்தைப் பார்த்தான். மகிழ்வு பூத்திருந்த அவ்வதனத்தில் நாணமும் சூழ்ந்திருந்தது. ஆகா! பெண் முகத்துக்கு வெட்கம்