பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#49 & |வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | அதிகமான வசீகரத்தை அளிக்கிறது என வியந்தது அவன் உள்ளம். 'நன்றி என முணுமுணுத்தவாறே அவள் தனது நோட்டை வாங்கிக் கொண்டாள். - இதற்குள் பிளாட்பாரத்தில் பரபரப்பு பரவியிருந்தது. வண்டி வருவதை அறிவித்தது ஜனங்களின் பதட்டம். அப்போ நாங்கள் வருகிறோம், லார், ரொம்ப மகிழ்ச்சி என்று சொல்லி, வணக்கம் அறிவித்து விட்டு அவ்விருவரும் வேறொரு பிளாட்பாரத்தில் நின்ற வண்டித் தொடரை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் போகும் அழகை ரசித்தபடி இருந்த பாலகிருஷ்ணனின் மனம் தனது கபாவத்தைக் காட்டத் தொடங்கியது. அ; டாடா! நான் இதுவரை அக்கம்பக்கத்தை கவனிக்கவே இல்லையே. அந்த இரண்டு பேரோடும் நான் பேசிக் கொண்டிருந்ததை எவ்வளவோ பேர் கவனித்திருப்பார்களே! என்னைப்பற்றி அவர்கள் தவறான அபிப்பிராயம்தானே கொள்வார்கள் ? என்று அவன் எண்ணினான். செச்சே, நான் தவறுக்கும் மேல் தவறுகள் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று வருத்தப்பட்டான் அவன். ஆமாம். அவள் பெயரைக் கேட்காமல் இருந்து விட்டோமே! அது கூடத் தவறு தான் என்று மனம் குற்றம் சாட்டியது. : 3. . தனது சிநேகிதியின் பெயரைச் சொன்னாளே அவள்; தன்னுடைய பெயரையும் அவளே ஏன் சொல்லியிருக்கக் கூடாது? ஒரு வேளை நானாக விசாரிக்க வேண்டும் என்று அவள் எண்ணினாளோ என்னவோ!' இந்த எண்ணத்தை அமுக்கி விட்டு மேலோங்கியது