பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 & |வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | என்ன? அவர் கண்களுக்கு மட்டும் கறுப்புப் பூனை தெரிகிறது; நன்றாக, தெளிவாகத் தெரிகிறது. அதன் பார்வையை அவர் எப்படி உணராமல் இருக்கமுடியும்? நையாண்டி செய்து சிரிப்பதுபோல் தோன்றும் அதனுடைய வாய் அமைப்பைத்தான் கவனிக்காமல் இருக்கமுடியுமா? அது ராஜாங்கமாக உடகாருகிறது. அட்டகாசமாகப் பார்க்கிறது. நீட்டி நெளித்துவிட்டு, அவர் பக்கம் அலட்சியப்பார்வையை வீசியவாறு, அசைந்து நடந்து போகிறது. ஆனால் ஒரு தடவை கூடக் கத்தவில்லை. அது மாத்திரமல்ல. மற்றவர்கள் கண்களுக்குப் புலனாக வில்லையாமே? இது என்ன? வேடிக்கை என்பதா? அதிசயம், அபூர்வம், அதீதம், மர்மம் என்று ஏதாவது சொல்வதா? விளங்கவே இல்லை; விளங்கவே இல்லை. எண் ண எண்ண மூளைக் குழப்பம் திச்சயமாக ஏற்பட்டுவிடும் போலிருந்தது பிள்ளைக்கு. 'ரொம்பவும் அதிசயமாகத்தான் இருக்குது, மாமா' என்றான் சிவசைலம். ஆமா, முதலாளி என்று சொன்னான் மூக்கையா. யாரு கண்ணுக்கும் தெரியாது அரிச்சந்திரன் தாலி என்பார்கள். அந்தச் சந்திரமதி கழுத்துத் தாலி அரிச்சந்திரன் கண்ணுக்கு மட்டுமே தெரிந்ததாம். அப்படி அல்லவா இருக்குது இந்தப் பூனை விவகாரம்: எங்களுகெல்லம் தெரியலே. உங்க கண்ணுக்கு மட்டுமே தெரிகிறது என்றால், இதிலே ஏதோ சூட்சுமம் இருக்குது என்றுதான் அர்த்தம். உங்க கையாலே கொல்லப்பட்ட பூனையினுடைய ஆவி உங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறதோ என்னமோ என்று சிவசைலம் சொன்னான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். மனுஷங்க தான் பிசாசு ரூபத்திலே அலைவாங்க. பிராணிகளும் அப்படி வருமா? 'జ్ఞా ! நிச்சயமாக வரும் . நான் சில பேப்பர்களிலே கூட நிஜ விஷயமாக வந்தவற்றைப் படித்திருக்கிறேன். அது