பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5, s3sosnwnc G| & 188 ஏன், நானே என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஒரு நாயி, என்று நீட்டினான் மூக்கையா. போதும் போதும்! என்று எரிந்து விழுந்தார் பெரிய பிள்ளை. அவர் தான் இரண்டு பேரிடமும் அபிப்பிராயம் கேட்டார். பூனை தனது பார்வையில் பட்ட உடனே, அவர் மற்ற இருவரையும் அழைத்துக் காட்டினார். அதோ பூனை இருக்கிறதா இல்லையா? சுகமாகப் படுத்துக்கொண்டு நாக்கினாலே உடம்பை நக்கிக்கொண்டு என்று சுட்டிக் காட்டினார். இல்லையே, எங்கே சொல்றீங்க?. தெரியலயே பூனை இல்லியே' என்றுதான் இரண்டு பேரும் சொன்னார்கள். சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அதன் பிறகு தான் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். அவர்கள் பேச்சு பெரிய பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்கு யார் என்ன செய்ய முடியும் அவர்கள் அங்கேயிருந்து போய் விட்டார்கள். டுெ கிலாசம் பிள்ளை கோபப்பட்டாரே தவிர, அவர்களுடைய பேச்சில் உண்மை இருக்கிறது என்று தான் அவர் மனம் பேசியது. பூனை தன்னைப் பழிவாங்கத் திட்டமிட்டு இப்படி வந்து பயமுறுத்துகிறது என்று அவரும் எண்ணத் தொடங்கியிருந்தார், - கறுப்புப் பூனை அந்தி நேரத்திலும், முன்னிரவிலும் மட்டுமே அவர் கண்களுக்குப் புலப்பட்டது என்றில்லை. காலையில் அவர் கண்விழித்து எழும்பொழுது தென்படும். அவர் எப்பொழுதாவது வெளியே கிளம்புகிற போது தென்படும். அவர் எப்பொழுதாவது வெளியே கிளம்புகிற பொழுது குறுக்கிட்டாலும் குறுக்கிடும். மத்தியானத்துக்கு மேல் உண்ட கிறக்கத்தினால் அவர் சோர்ந்து கிடந்தபோது, அது எங்காவது ஒரு இடத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருக்கும். இரவு நேரத்தில் அவர் படுக்கை அருகில் சுற்றிவரும். அந்தப் பூனை உயிரோடு இருந்தபோது