பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 చ. ಎಣಿà5ಣಿರ್ತಾಗಿಣಿ! மணியான கதைகள் அனுஷ்டித்து வந்த காரியங்களையெல்லாம் இப்பொழுதும் செய்து வந்ததாகத் தோன்றியது. ஆனால் கூச்சலிட்டுக் கொண்டு இதர பூனைகளை விரட்டித் திரியவில்லை. சில தினங்களாக மற்ற வெள்ளைப் பூனைகளை அந்தப் பக்கத்தில் காண முடியவில்லை. இந்த உண்மை அவருக்கு திடீரென்று மனசில் பட்டது. ‘பேயாக மாறி அலைகிற கறுப்புப் பூனைக்கு பயந்துதான் மற்றப் பூனைகள் ஒடி ஒளிந்திருக்கும் என்று எண்ணினார் அவர். இதனாலும் அவருடைய மன உதைப்பு அதிகமாகிவிட்டது. விழிப்பு நிலையிலே பூனையைக் கண்ணாரக்கண்டு மிரண்டு கொண்டிருந்த பிள்ளை, தூக்கத்திலே பயங்கரமான கனவுகள் கண்டு அலறினார். பூனை கோர உருவங்களில் தோன்றி அவரைக் கடித்துக் குதறிச் சித்திரவதை செய்வதாக மதிமயங்கி அவதிப்பட்டார். - 'மந்திரவாதி எவனையாவது அழைத்து வரட்டுமா? மாமா என்று கேட்டான் சிவசைலம். 'மந்திரவாதியும் வேண்டாம். வைத்தியனும் வேண்டாம். இப்ப எனக்கு என்ன சீக்கு வந்து விட்டது? என்று சீறினார் பிள்ளை. - 'உங்கள் இஷ்டம் என ஒதுங்கிவிட்டான் மருமகன். மறுபடியும் வெள்ளிக்கிழமை வந்தது. அவருடைய வாழ்க்கையில் முக்கியமான மூன்றாவது வெள்ளி அது. முதல் வெள்ளியன்று அவர் பூனைமீது தடியை வீசி எறிந்தார்: இரண்டாவது வெள்ளி முதல்தான் பூனை அவரை பயம் காட்ட ஆரம்பித்திருந்தது. இது மூன்றாம் வாரம். ; : - - - இந்த எண்ணம் கைலாசம் பிள்ளையின் மனதில் தலைதுாக்கி நின்றது. அவர் உள்ளத்தில் அன்று காலையிலிருந்தே தெளிவற்ற பீதி கலவரப்படுத்திக்