பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத ്ധ്രി * † 90 கொண்டிருந்தது. அவருடைய உடல் தளர்ந்து கைகள் பதறி நடுங்கிக்கொண்டிருந்தன. உடல் சோர்வும் உள்ளச் சோர்வும் அவரை வெகுவாக பாதித்திருந்தன. அமைதி இல்லாமல் தவித்தார் அவர் தனக்கு என்ன வியாதி; தன் மனசுக்கு என்ன வந்து விட்டது என்பதே அவருக்குப் புரியவில்லை. ஊர்ந்து செல்கிற ஒவ்வொரு மணி நேரமும் அவர் உடம்பிலும், உள்ளத்திலும் அர்த்தமற்ற-காரண காரியத் தொடர்பு இல்லாத-இன்னதுதான் என்று தெளிந்து கொள்ள இயலாத விதத்திலே ஏதோ ஒரு சுமையை சோக பூர்வமான ஒரு உணர்வை பதித்துவிட்டு முன்னேறுவது போல் தோன்றியது அவருக்கு. அவர் அசந்து அசந்து படுத்தார். சுருண்டு முடங்கிச் சோர்ந்து கிடந்தார். அந்தி வந்தது. இரவு அதைக் கவ்வி விழுங்கிகிட்டு. தாறுமாறாக முளைத்துக் கிடந்த நட்சத்திரப் பற்களைக் காட்டிச் சிரித்தது. அப்போழுது கைலாசம் பிள்ளை கட்டிலில் படுத்துக் கிடந்தார். அவருக்குப் பின்னால் தலைமாட்டில், சுவரில் விளக்கு மாட்டப்பட்டிருந்தது. எரியும் சுடரால் கவரப்பட்டு எவ்வளவோ பூச்சிகளும் கொசுக்களும் விஜயம் செய்திருந்தன. பறந்து சுழல்வனவும் வீழ்ந்து சாவனவும் சோர்ந்து சுவரில் இருப்பனவும் ஊர்வனவுமாக உயிர்த்துடிப்பு பல்வேறு உருவங்களில் இயங்கிக் கொண்டிருந்தது. உயிரைத்தின்று உயிர் வாழ வேண்டியிருக்கிற நியதிப்படி இயங்கும் பிராணிகளும் அங்கு தலை காட்டியிருந்தன. சிறு பூச்சிகளைத் தின்பதற்காகச் சில பல்லிகள் வந்திருந்தன. அவை கருமமே கண்ணாகிக் காலம் போக்கின. இந்த ரக உயிர் இயக்கம் எதையும் கவனிக்கவில்லை பிள்ளை. அவர் ஏதோ நினைவாகப் படுத்துக் கிடந்தார். திடீரென்று அவர் பார்வை ஒரு திக்கிலே பாய்ந்தது. அங்கிருந்து ஒரு சக்தி கவனத்தைக் கவர்ந்தது. இழுக்கும் காந்தத் தன்மை பெற்றுவிட்டதுபோல் தோன்றியது.