பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q" ఫో - * - 3. - 194 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் ஏனேனில், அவர் பார்க்கவும், அங்கிருந்து கறுப்புப் பூனை அவரையே பார்த்துக்கொண்டிருப்பது அவருக்குப் புலனாயிற்று. அந்தப் பூனையின் கண்களில் படர்ந்த மஞ்சள் குறுகி ஒளிரேகை அகன்றிருப்பதாக உணர்ந்தார் அவர். அது தன்னையே பார்ப்பதாகவும் பாய்வதற்குக் குறிவைப்பதாகவும் தோன்றியது அவருக்கு, காலை ஒரு முறை சுழற்றிக்கொண்டதாகத் தெரிந்தது. மெதுவாக நடந்து முன்னே, முன்னே அது வருவதாக உணர்ந்தார். விழிகளில் பிரகாசம் அதிகரிக்க, அந்தப் பூனை வெகுவாக முன்பாய்ந்தது. அது தனது குரல்வளையிலே அழுத்தமாக நகங்களைப் பாய்ச்சி ரத்தத்தைத் தன் வாயினால் சுவைக்கப்போகிறது என்று பிள்ளைக்குத் தோன்றியது. கறுப்புப் பூனை பாய்வதையே கவனித்துக்கொண்டிருந்த பிள்ளையின் தொண்டையிலிருந்து ஒரு கூச்சல் கிளம்பியது. அது கோரமாக ஒலித்தது. பயங்கரமாக தொனித்தது; பரிதாபகரமாகவும் கேட்டது. அவல அழுகை போலவும் பரவியது. பின் அமுங்கி ஒடுங்கிவிட்டது. அக்கூவலைக் கேட்டு சிவசைலமும், மூக்கையாவும், மாடசாமியும் ஓடிவந்தார்கள். பிள்ளை கிடந்த நிலையைப் பார்த்தவர்கள் ஒரு பல்லியைக் கவ்விக் கொண்டுபோய் விழுங்கி கடமுடவென்று ஒலி எழுப்பும்படி வாயை அசைத்துச் சுவைத்துக்கொண்டிருந்த கறுப்புப்பூனையையும் பார்த்தார்கள். உடலும் உயிரும் உள்ள பூனைதான் அது. உண்மையைப் புரிந்துகொண்டு தலை ஆட்டினான் சிவ சைலம், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு புன்னகைபூத்தான் மூக்கையா. கையைப் பிசைந்தபடி கண்கலங்க நின்றான் மாடசாமி. மாடசாமி கண்களைத் துடைத்துக் கொண்டு சோகக் குரலில் விம்மி விம்மிப் பேசினான். சின்ன ஐயா விளையாட்டுதான். தமாஷாக நடந்துவிட்டு அப்புறம் சொல்லிவிடலாம் என்றதனாலே நானும் தலை யாட்டினேன். அது இப்படி முடியுமென்று தெரிந்திருந்தால்