பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலுக்குமுண்டோ கடன்? | & 32 விஸ்வநாதன் வத்ஸலாவைத் தனிமையில் சந்தித்ததும், முதல் காரியமாகத் தன் கையை வேகமாக நீட்டினான். அவன் கன்னங்கள் சிவந்தன. அவன் அடிப்பதற்காகக் கைநீட்டவில்லை. அவள் கன்னங்கள் அடிபட்டுச் சிவக்கவுமில்லை! அவன் கையிலிருந்த ஒன்றரையனாவைக் கண்டுதான் அவள் நாணம் அடைந்தாள்! 分2 "இந்தா உன் காசு. முதலில் கடன் தீர்ந்துவிடட்டும் என்று முனு முணுத்தான் வைராக்கியசாலி! 3. "என்னை மன்னிக்கணும். தயவுசெய்து மன்னிச்சிடுங்க என்றாள் அவள். “மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது. வத்ஸல்?” என்றான் விஸ்வநாதன். - அவள் காதுகளில் இனிமை கிளுகிளுத்தது. அவள் உள்ளத்தில் ஆனந்தம் சிலிர்த்தது. முகம் செங்கனியாகியது. அதற்குள்...! 'கல்யாணத்திற்குப்பின் கொஞ்சம் பாக்கி வைத்திருங்கள்" என்ற சொற்கேட்டு, வெட்கமும் கூச்சமும் மெருகிட உள்ளே போனாள் வத்சலா விசு தன் தகப்பனாரிடம் வந்தான். r శ్రీ r