பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவராமன் ரின் எண்ணமெல்லாம் அவளாக இருந்தாள்; எழுத்தெல்லாம் அவளாக இருந்தாள். பேச்செல்லாம் அவளாகவே நிறைந்து நின்றாள். அவள் அவனுடைய காதலி! தினைவிலே உணர்வாக வியாபித்து நின்ற அவள் அவனது கனவின் உயிராக நிழலாடி வாழ்ந்தாள். அவள் பெயர் வசந்தா. வறண்ட என் வாழ்க்கையில் பசுமை சேர்க்கக் கூடிய வசந்தம் அவள் சாரமற்ற வாழ்வில் புது மலர்ச்சி பூத்துக் குலுங்க வகை செய்யும் இனிமை அவள் என்று அவன் { சொல்லுவது வழக்கம். அவள் அவனை அதுவரை சந்தித்தது இல்லை. காதலன்-காதலி என்ற உணர்வோடு, உரிமையோடு, சந்தித்துப் பழகியதில்லை இருவரும். எங்கோ எப்பொழுதோ இருவரும் பார்த்திருக்கிறார்கள். சும்மா சிரித்திருக்கிறார்கள். சாதாரணமாக ஏதோ பேசியிருக்கிறார்கள். காரணமற்ற சிரிப்பு சிரித்து, அர்த்தமற்ற பேச்சுப் பேசி, சூழ்நிலையை மறந்து விட்டு, நிகழ்காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனோகரமான எதிர்காலத்தை எதிரே நிறுத்தி இன் பக் கனவுகளில் ஈடுபட்டுத் தம்மை மறந்து இருந்ததில்லை அவ்விருவரும். அவ்விதம் எல்லாம் பழக அவன் ஆசைப்பட்டது உண்டு.