பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டைக் கோழி) “ஏ : பொண்ணு!” "இந்தா பாரேன், ஏய் புள்ளே!” "ஏய் செல்லம்!" முருகையாவின் குரல் படிப்படியாக உயர்ந்து கொண்டிருந்தது. அப்படி அவன் தன்னைத் தான் கூப்பிடுகிறான் என்பதைச் செல்லம் உணராமல் இல்லை. அவன் குரல் காதுகளில் படமுடியாத தொலைவிலும் அவள் நிற்கவில்லை. எனினும், அவள் அவன் பக்கம் பார்வை எறிந்தாள் இல்லை. - "ஏய் செல்லம்" என்ற சொல் கேட்டதும் தான் அவள் சீற்றத்தோடு தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். "ஒகோ! இவ்வளவுக்கு ஆயிட்டுதா!" என்று உறுமினாள். - - "அவள் கழுத்தை வளைத்து, முகத்தை நிமிர்த்தி, வெகுண்டு பார்க்கும் நிலை மிகவும் அழகாக இருக்கிறது. தோகை மயில் திரும்பிப் பார்ப்பது போல் எடுப்பாக இருக்கிறது. நன்றாக வளர்ந்த சேவல் மிடுக்காக நோக்குவது போல் ஜோராக இருக்கிறது."-இவ்வாறு அவன் உள்ளம் வியந்து கொண்டிருந்தது. - - அதே வேளையில் சிெல்லத்தின் வாய்பொரிந்து கொண்டிருந்தது. "ஏயாமில்லே, ஏங் தாலி கட்டினவளைக் கூப்பிடுகிற மாதிரித் தான்.ஏய்-ஏபுள்ளே-பொண்ணு!. இவரு விட்டிலே வேலைக்கு வந்து நிற்கிலியே ஏ புள்ளே யின்னு இவரு கூப்பிடுறதுக்கு ---