பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கிண்னனின் மணியான கதைகள்( ټiه 53 "ஏதோ கூப்பிட்டுப் போட்டேன். அதுக்காக நீ ஏன் இப்படி உஸ் புஸ்ணு நல்ல பாம்பு சீறுகிற மாதிரி சீறிக்கிட்டு வாரே?" என்றான் முருகையா. "ஒகோ! நான் நல்ல பாம்பு மாதிரி வாரேனா இராது பின்னே! நீ ஏன் கொம்பேறி மூக்கன் மாதிரி எப்ப பார்த்தாலும் என் மேலேயே கண்ணுவச்சுக்கிட்டு அலைகிறே! இல்லை, கேட்கிறேன்! நீ ஏன் என்னை ஏய்னு கூப்பிடணும்கிறேன்!” என்று கத்தினாள் அவள். "உன்னை எப்படிக் கூப்பிடுறதுன்னு முதல்லே எனக்குத் தோணலே.” "நீ எதுக்காக என்னைக் கூப்பிடணும்கிறேன்! அதுதான் என் கேள்வி. நீ ஏன் என்னைக் கூப்பிடனும்?” செல்லம் முழுதும் திரும்பி, இடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டு, சவால் விடுகிற தோரணையில் தலை நிமிர்ந்து நின்றாள். “ஒரு விஷயமாகத்தான் கூப்பிட்டேன்” என்று ஆரம்பித்தான் முருகையா, அவள் தணியவில்லை. “விசயம் என்னங்கிறேன்’ விசயம்! விசயமிருந்தால் எங்க அப்பன் கிட்டேச் சொல்றது தானே! என்னை நீ ஏன் 'ஏய்-ஏ பொண்ணு-ஏ புள்ளே’ இன்னெல் லாம் கூப்பிடணும் கிறேன்' õT 6öT İQJ சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல் லிக் கொண்டிருந்தாள். "அம்மா செல்லத்தம்மா, நான் கூப்பிட்டது தப்புதான். அதுக்காக இன்னொரு தப்பை நான் மறந்துவிட முடியாது. ஆமா, நீ வளர்க்கிறியே பொன்னான கோழி-அருமையான சேவல்.” "அது பொன்னுதான். அது அருமைதான். உன்கிட்டே யாரும் மெடலு கேட்கலியே அதுக் காவ !' என்று முழங்கினாள் செல்லம்