பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一二口 ക് |ഗങ്ങ0 ഒ്ജമ 435 § 88 குரங்குத்தனம் பண்ணுதே' என்று பலவாறு எரிந்து விழுவது சகஜமாயிற்று. அன்பான போற்றுதலையும் செல்வமான சீராட்டு தலையும் பெறுவதும் ஆங்கார அதட்டுதலையும் சீற்றச் சுடுசொற்களையும் ஏற்றுக்கொள்வதும் குழந்தை வாழ்வின் பகல் இரவுகள் போல் அமைந்து விடுகின்றன. அல்லது, பெளர்ணமி போலவும் அமாவாசை போலவும் சேருகின்றன என்றும் சொல்லலாம். . பார்வதியின் அருமருந்தன்ன செல்வன் 'மணிப்பயல்’ வாழ்க்கை மாத்திரம் விதி விலக்காக அமைந்துவிடுமா? அவன் சிரித்தான். விளையாடினான். தனக்கு மட்டுமே புரிகிற ஒரு பாஷையில் தனது உள்ளத்து ரகசியங்களை எல்லாம் உலகத்துக்கு உணர்த்திவிடத் தவித்தான். பெரியவர்கள் புரிந்துவிட்டதுபோல் மகிழ்ந்தார்கள். புரியாமல் திணறியபோது அவன்மீது எரிந்து விழுந்தார்கள். அவன் தனது ஆசைகளை அடைய வேண்டும் என்று துடித்தான். பெற்றவர்களுக்கு சுலப சாத்தியமாகிற போது அவனுக்குத் திருப்தி அளிக்கத் தயாராக இருந்தார்கள். சர்வ வல்லமை பொருந்திய பணம் அவர்கள் மீது அருள் புரியத் திருவுளம் இசையாத போது, அவர்கள் அவனுடைய சிறு ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடினார்கள். அவன் பிடிவாதம் பிடித்து அழுவதும், அம்மா-இல்லா விட்டால், அப்பா-அவனை அறைந்து அவன் ஆசையை ஒடுக்கிவிட முயல்வதும் சாதாரண நிகழ்ச்சிகளாயின. வானத்து அம்புலியைப் பிடித்துத் தரவேணும் என்று அழுவதும் யானையைப் பிடித்துக் குடத்தில் அடைத்துக் கொடு என்று அடம் பிடிப்பதும் குழந்தைப் பண்பு தானே? கரும்பு வேண்டும் என்று அழுகிற குழந்தைக்குக் கரும்பு வாங்கிக் கொடுக்கலாம். நறுக்கித் தா என்று அழத் தொடங்கினால் துண்டு துண்டாக அரிந்து கொடுக்கலாம். உடனடியாகவே இதை எல்லாம் சேர்த்து முழுக்கரும்பு