பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 வல்லிக்கண்ணனின் மணியான ತ್ರಿ! இப்படிச் சிரித்து அழகாக இருக்கிற பிள்ளை வீணாக அடிபட்டுத் தன் உடம்பையும் பாழாக்கிக் கொள்ளுகிறது. நம்ம மனசையும் புண்ணாக்கி விடுதே, ஏன் அப்படிச் செய்கிறது? என்ற சந்தேகம் தாயுள்ளத்தில் எழாமல் இருக்க முடியுமா? அப்பொழுதெல்லாம் அவள் மனம் மிகுந்த துயரம் அனுபவிக்கும். நமது குழந்தை-நம்முள் வளர்ந்து, நம்மையே பிரித்தெடுத்தது போல் உருவான சிசு-அதனுடைய மனமே நமக்குப் புரியவில்லையே! என்ற எண்ணம் வேதனையாக உறுத்தும் அவளை. - மணி அவனுடைய சுபாவத்திலேயே வளர்ந்து வந்தான். தான்-தனது-தனக்கு என்கிற உணர்வு அவனுள் மிகுதியாக மண்டிக்கிடப்பது போல் தோன்றியது அவனைப் பெற்றவர்களுக்கு, அதை மாற்றிவிட அவர்கள் என்ன செய்ய இயலும்? மணிப் பயலுக்குத் திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. இடையில் ஒரு பொம்மையைக் கண்டதன் விளைவு அது. அந்தப் பொம்மைப் பாப்பா தனக்கு வேண்டும் என்று அடம் பிடிக்கலானான் அவன். - பொம்மை அழகானது தான். தங்க நிற அலைகள் போன்ற நெளிநெளிக் கூந்தலும், குறுகுறுக்கும் கண்களும், கதுப்புக் கன்னங்களும், செவ்விய வாயும் எழிலுறுத்திய அந்த முகத்தைச் சதா பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற ஆசை பெரியவர்களுக்குக்கூட ஏற்பட்டது. கைகளை நீட்டிக் கொண்டு புன் முறுவலோடு உட்கார்ந்திருக்கும், அந்தப் பொம்மை அள்ளி எடுத்துக் கொஞ்சும்படி தூண்டுகிற வசீகர சக்தி பெற்றிருந்தது. அது மட்டுமல்ல. அதைச் சாய்த்து, முதுகு தரையில் படும்படி படுக்கவைத்தால் பொம்மையின் கண் இமைகள் மூடிக் கொள்ளும், அது அழுவது போல் கீச்சுக் குரல் எழும். அதைக் தூக்கி உட்கார வைத்ததும் அழுகை நின்றுவிடும்: கண்கள் திறந்து கொள்ளும்.