பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 424 அறிவிக்க அவர் தவறியதே இல்லை. அவருடைய கடிதங்களின் இத்தகைய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

லெனின் என்றும் எளிய வாழ்வே வாழ்ந்தார். எல்லோருடனும் சமமாகவும் சகஜமாகவும் பழகினார். சிறு குழந்தைகளிடம் அன்பாகவும் அனுதாபத்தோடும் மகிழ்ச்சியுடனும் பழகும் சுபாவம் பெற்றிருந்தார். உண்மையான பெரிய மனிதராகத் திகழ்ந்தார் அவர்.

லெனின் மனிதநேயத்தைப் பெரிதும் போற்றிய மக்களின் தலைவர்.

வரலாறு சில மனிதருக்குப் பெருமை அளிக்கிறது. சிலர் தம் செயலாலும் சிந்தனைகளாலும் வாழ்க்கைமுறையினாலும் வரலாற்றுக்குப் பெருமை தருகிறார்கள். லெனினோ ஒரு நாட்டின், வரலாற்றை மாற்றி அமைத்து, மக்களுக்குப் புதுவாழ்வு தந்து, புதிய வரலாறு படைத்த மாமனிதர். அவர் பெயரும் வரலாறும் என்றென்றும் ஒளிச்சுடராக விளங்கி, உழைப்பில் உயர்வு காணத் துடிக்கும் மக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டும் என்பதில்

சந்தேகமில்லை.