பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 123

எழுத்துலகத்துக்குக் கிடைத்த அரிய களஞ்சியம் ஆயிற்று. அவன் காலத்து நாட்டுநிலை, மனிதர்கள் நிலை, வாழ்க்கைநிலை அனைத்தையும் சித்திரிக்கும் அருமையான வரலாறு ஆகிவிட்டது அது.

அவன் வாழ்விலே உல்லாச வேட்டைக்காரனாக இருந்ததை மறைக்கவில்லை. மாறாகப் பெருமையே கொள்கிறான். சுரண்டப் படுகிறவனாக இருப்பதைவிடச் சுரண்டுவோனாக, மொட்டை அடிக்கப்படுகிறவனாக இருப்பதைவிட மொட்டை அடிப்ப வனாக, ஏமாளியாக இருப்பதைவிட ஏமாற்றுகிறவனாக இருப்பதே உயர்ந்தது, லாபகரமானது என்பது காஸனோவாவின் வாழ்க்கைத் தத்துவம். இந்த உலகத்திலே மக்கள் ஏமாற்றப்பட விரும்பு கிறார்கள். ஏமாறத்தயாராக இருக்கிறார்கள். அவர்கள் விரும்புவதை அவர்களுக்கு அளிப்பதே புத்திசாலித்தனம். இது அவன் நடை முறைக்கொள்கை.

அவன் தன்னை அல்பத்திருடன் ஜேப்படிக்காரன் ஜெயில் பறவை வகையராக்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை அங்கீகரித்த தில்லை. அவர்கள் வாழ்வின் அதலபாதாளத்தைச் சேர்ந்தவர்கள். இவனோ உயர்மண்டலத்தைச் சேர்ந்தவன். கலாசாரம் பணப் பகட்டு படாடோபம் முதலியன நிறைந்த உலகத்தைச் சேர்ந்தவன். மடத்தனம் பெற்ற மகானுபாவர்களிடமிருந்து பணத்தைத் திறமை யாய், வசீகரமாய், நயமாகக் கறந்துவிடும் திறமையன். இது அவனது தொழில் என அவன் கருதவில்லை.

அவனுக்கு அது ஒரு தனிப்பெரும் கலை. மனோகர விளையாட்டு. அருமையான கடமையும்கூட தனது இயல்புகளுக்கு ஏற்பத்தனக்கு மகிழ்ச்சி தேடிக் கொள்வதுதான் வாழ்க்கையின் உன்னத நோக்கம் என்று தத்துவஞானம் பேசிய அவன் தன் ஆற்றலுக்கு ஏற்றதைக் குறைவறச் செய்துவந்தான். மரமண்டையர் களைச் சுரண்டு, பகட்டர்களை ஏமாற்று அப்பாவிகளை அசடு களாக்கு. பெரும் செல்வம் பெற்ற கஞ்சனின் பணச்சுமையைக் குறை. கல்யாணம் செய்துகொண்டு பெருமைப்படுகிற கணவன் மார்களின் மனைவியரைப் படுக்கைத் துணையாக்கிக்கொண்டு அந்த ஆண்களை ஏமாந்த சோணகிரிகளாக்கி இன்புறுக - இவற்றை நிறைவேற்ற வேண்டியதை ஒரு தேவகட்டளையாகக் கொண்டுவிட்டவன் போல் அவன் வாழ்ந்தான். இந்தக் கடமை களை அவன் மனசுக்குப் பிடித்த வகையிலும் மகத்தான தன்னிறை வோடும் செய்து தீர்த்தான்.

மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன கருதினார்கள் - கருது வார்கள் - என அவன் ஒருபோதும் கவலை கொள்ளவில்லை. நானே எனக்கு எஜமான். இதுவே என் பெரும் தனம். எதை