பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 வல்லிக்கண்ணன்

எண்ணியும் நான் பயப்படமாட்டேன் என்று எழுதியுள்ள காஸ்னோவா சுத்த சுயம்பிரகாசச் சுயேச்சை வீரனாகவே தன் நாட்களைக் கழித்தான். எந்தத் தனியொரு பெண்ணும் தன் அன்பில் அரவணைப்பில், அவனை அடிமைகொண்டதில்லை. எந்த மன்னனும் அவனைத் தன் நாட்டிலேயே இருத்தி வைக்க முடிந்ததில்லை. ஒருசமயம் தெளிந்த நீரோடையாய், இன்னொரு கட்டத்தில் துள்ளிக் குதிக்கும் மின்னொளி நீருற்றாய், வேறொரு இடத்திலே திடுமென வீழ்ந்து கசத்தினுள் மறையும் நீரருவியாய அவன் வாழமுடிந்தது அவனது இயல்புகளின் காரணத்தினால் தான.

துணிச்சல் - இதுதான் காலனோவாவின் வாழ்க்கைக் கலை. அவன் பெற்றிருந்த வரப்பிரசாதம் ஆபத்துக்கள் வராமல் முன்யோசனையோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் முயன்றானில்லை. என்ன அபாயம்தான் எதிர்நிற்கும், பார்ப்போம் என்று அச்சமற்று முன்னேறிய தீரன் அவன். முதலில் பாதுகாப்பு என்ற உணர்வு பெற்ற ஆயிரம் ஆயிரம் மக்கள் மத்தியிலே எதுவந்தால் என்ன எது போனால் என்ன, என்று அனைத்தையும் இழக்கத்துணிந்து எதையும் ஏற்க முனைந்து முன் பாயும் ஒற்றைத் தனி மனிதனாக விளங்கியவன் அவன். துணிந்த வனுக்கு அதிர்ஷ்ட தேவதை துணை நிற்பாள் என்றுதானே உலகஞானம் பேசுகிறது! அவள் அவனைக் கைவிடவில்லை என்பதை அவனது வரலாறு நிரூபிக்கிறது.

சதை உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு செயலாற்றியவன் காலனோவா. அவனுக்கு மனப்போராட்டம் இருந்ததில்லை. மனச்சாட்சி என்கிற ஒன்று அவனிடம் இல்லாதிருந்ததனால் பாப புண்ணிய அரிப்பு, உள்ளுணர்வுக்குறுகுறுப்பு எனும் விவகாரம் எதுவும் அவனுக்குத் தெரியாது. ஆத்மா என்று சொல்லப்படுகிற ஒன்றை அவன் பெற்றிருக்கவில்லை. அவன் பெற்றிருந்தது உறுதியான இன்பவேட்கை மிகுதியாகக் கொண் டிருந்த சதையும் ஆண்மையும். அவன் அறிவை வழிபடவில்லை. புலன்உணர்வுகளைப் பூஜித்தான். ஆகவே அவன் பந்தம்பாசம் நிலையான குறிக்கோள் அறநெறி உணர்வுகள், சமுதாயப் பொறுப்பு போன்ற எதையும் அங்கீகரிக்கவில்லை.

கெளரவம் மரியாதை மானம் - இவை எல்லாம் அவனைப் பொறுத்தமட்டில் வெறும் வார்த்தைகள். இவற்றை எட்டிப்பிடிக்க முடியுமா? தொட்டு விளையாடக்கூடுமா? கிளுகிளுத்துக் குது.ாகலிக்கும் பொம்பிளைகளை அள்ளி அணைப்பதுபோல் ஆறத் கழுவிக் கொள்ளத்தான் இயலுமா? பின்னே என்ன விட்டுத் தள்ளு. அவனது வாழ்க்கை தர்மம்: இன்ப உணர்வுகள் பொதிந்து