பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் +3

களில் தி.நா.சுப்பிரமணியன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். இவர் எழுதிய கதைகள் பின்னர் தோட்டியை மணந்த அரசுகுமாரி என்ற தொகுப்பாகவும், வேறு சில புத்தகங்களாவும் வெளிவந்தன. இவர் கட்டபொம்மு வரலாறு எழுதினார். நவயுகப் பிரசுரம் ஆக 1940களில் வெளிவந்த இந்த நூலில் வரலாற்று உண்மைகள் ஒரு வறண்ட தன்மையில் சொல்லப்பட்டிருந்தன. இதை, காயடித்த கட்டபொம்மு என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டார்.

மணிக்கொடி எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனும் சரித்திரச் சிறுகதைகள் எழுதினார். அழகியமுறையில் படைக்கப் பட்ட அவை ‘காணாமலே காதல்’ என்ற தொகுதியாக பின்னர் பிரசுரம் பெற்றன.

அந்நாட்களில் வீரம், போர்புரிதல், தியாகம், காதல் முதலிய வற்றைச் சித்திரித்த சரித்திரக்கதைகள் பெரும்பாலும் ராஜபுத்திர மன்னர்களையும் அரசிகளையும் பற்றியே அமைந்திருந்தன. சிவாஜி, புத்தர், விஜயநகர சாம்ராஜ்ய விஷயங்களும் அபூர்வமாகக் கன்தப் பொருள்களாக ஆக்கப்பட்டது உண்டு.

அந்நாட்களில் வேறு இந்தியமொழிகளில் சரித்திர நாவல்கள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல நல்ல வெற்றியும் மிகுந்த கவனிப்பும் பெற்றதுமுண்டு. அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, புத்தகங்களாக வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. தேவி செளது ராணி, துர்கேச நந்தினி பிருதிவி வல்லபன், ராஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் போன்ற நாவல் மொழிபெயர்ப்புகள் 1940களில் தமிழ் வாசகர்களின் பாராட்டுக் களைப் பெற்றிருந்தன.

ஆங்கிலம் படித்தவர்கள் சர் வால்டர் ஸ்காட் எழுதிய வரலாற்று நாவல்களையும், அலெக்சாண்டர் டுமாஸ் பிரஞ்சு மொழியில் எழுதி ஆங்கிலமொழி மூலம் உலகப் பிரசித்தி பெற்றுள்ள சரித்திர ரொமான்ஸ் படைப்புகளையும் விரும்பிப் படித்து மகிழ்ந் தார்கள்.

வால்டர்ஸ்காட் நாவல்களில் சரித்திர ஆதாரங்கள் அதிகம். அவர் எழுத்து நடை காம்பவுண்ட் சென்டன்ஸ்களையும் காம்ப் ளெக்ஸ் சென்டன்ஸ்களையும் மிகுதியாகக் கொண்ட சிக்கல் நிறைந்த நீளமான வாக்கியங்களும் நீண்ட பாராக்களும் கொண்ட தாக இருக்கும். எனினும் சுவாரஸ்யமான கதைப்பின்னல்களும் ஈர்க்கும் சம்பவ அடுக்குகளும் வீரதீரப் போராட்டக் கட்டங் களும் வாசகருக்குத் தனி லயிப்பு ஏற்படுத்திவிடும். (தமிழில் சரித்திர நாவல்கள் எழுதத் தொடங்கிய சாண்டில்யன் இப்படிப்பட்ட ஒரு நடையைக் கையாண்டதை நினைவு கூரலாம்)

டுமாஸ் நாவல்கள் அதீத கற்பனாலங்காரத்தோடு, மர்மங்கள், சூழ்ச்சிகள், வீரக்கதாபாத்திரங்களின் சாமர்த்தியங்கள், தந்திரங்கள்