பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தில் காந்தியத் தாக்கம்

இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம், தனிமனித வாழ்க்கை, கலை, இலக்கியம், ஆன்மீகம், முதலிய சகல துறைகளையும் பாதித்த ஒரு வலிய தத்துவமாக விளங்கியது காந்தியம்.

இந்திய விடுதலைப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கி மக்களுக்கு வழிகாட்ட வந்த காந்திஜி வெறும் அரசியல் தலைவராக மட்டும் செயல் புரியவில்லை. தனிமனித வாழ்க்கை முறைகளை மேம்படுத்தி, சமூக வாழ்வை சீருறச் செய்து, நாட்டில் வாழ்வும் வளமும் நலமும் பெறுவதற்காக மக்களுக்கு விடுதலை உணர்வைப் புகட்டி, அவர்களைச் சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபடத்துரண்டிய காந்தி அறவழி போதிக்கும் ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்தார்.

விடுதலை உணர்வு, சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம், தீண்டாமை ஒழிப்பு, கள் உண்ணாமை, கிராமசீர்திருத்தம், கைத்தொழில் வளர்ச்சி முதலியவற்றை வலியுறுத்தும் தத்துவமாக காந்தியம் அமைந்து காணப்பட்டது. இவற்றுடன் மொழிகளின் வளர்ச்சியிலும் காந்திஜி அக்கறை காட்டினார்.

விடுதலை உணர்வை வளர்க்கவும், விடுதலைப் போராட்டச் செய்திகளை மக்களி