பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வல்லிக்கண்ணன்

உணர்வை, மக்கள் சக்தியின் இயக்க வேகத்தை உள்ளது உள்ளபடி விளக்கும் எதார்த்தச் சித்திரங்கள் அவை.

பிரேம்சந்த் தன் எழுத்துக்கள் மூலம் வலியுறுத்த விரும்பிய உண்மைகளில் மிக முக்கியமானது. மனிதன் பரிபூரண நல்ல குணம் கொண்டவனுமல்ல, முழுக்க முழுக்கத் தீயபண்புகள் பெற்ற வனுமல்ல. நற்குணங்களும் தீயபண்புகளும் கொண்டிருப்பவன் அவன். வாழ்க்கையில் மனிதன் தவறுகள் செய்கிறான். வீழ்ச்சி அடைகிறான். ஆனாலும் இறுதியில் அவன் விழித்துக் கொள் கிறான். எழுந்து நிற்கிறான். தரும நியாயங்கள் பழிபகைமைகளை ஒதுக்கிவிட்டு, செயல் புரியக்கூடிய இயல்பு மனிதனின் உள்ளத்தில் ஆழ்ந்து உறைகிறது".

இந்த விதமான லட்சியநோக்கு பெற்றிருந்ததனால், பிரேம் சந்தின் எழுத்துக்கள் வாசகரின் உள்ளத்தை மேம்படுத்தும் ஒரு நல்ல சக்தியாக விளங்கின. நேர்மைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த அவர் அநியாயத்தை, அக்கிரமங்களை அயோக்கியத் தனங்களைக் கண்டித்தார். வாழ்க்கையின் எதார்த்தங்களைத் தெளிவாக விவரித்த அவர், மனிதர் வாழ்வில் உள்ளார்ந்து கிடக்கிற தீயசக்தியின் போராட்டங்களை, நல்ல பண்புகளை, தீமைக்குணங்கள் அடக்கி ஒடுக்குவதைக் கண்டு கொள்ளவும், எடுத்துக்கூறவும் தவறவில்லை. எனினும், இறுதி வெற்றி நற்பண்புகளுக்கே என்று அவர் திடமாக நம்பினார்.

பிரேம்சந்தின் பெரும் சமூகநாவல்களில் முதலாவதாக எழுதப்பட்டது சேவாசதனம். இதுதான் உருது. இந்தி மொழி களில் தோன்றிய முதலாவது சமூகநாவல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. இதற்கு முந்திய நாவல்கள் எல்லாம் கற்பனா சாகசங்கள் மிகுந்த அற்புத அளப்புகள் ஆகவே இருந்தன.

சேவாசதனம் வாழ்க்கையின் கசப்பான உண்மைகளை உள்ளது உள்ளவாறே காட்டியது. ஆசிரியர் எதையும் குறைத்துச் சொல்லவுமில்லை. கண்டிக்கவும் இல்லை. அதே வேளையில், வீழ்ச்சியுற்ற மனிதன் தலைநிமிர்ந்து தனது வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளமுடியும். அழிவு என்பது மனிதருக்கில்லை என்று வலியுறுத்தவும் அவர் தயங்கவில்லை.

இந்நாவலின் கதாநாயகி பெண்களுக்குரிய இயல்பான ஆசைகள் அதிகம் பெற்றவள். நல்ல நல்ல புடவைகள் அணிந்து அழகாகத்திகழவேண்டும், சுகமாக வாழவேண்டும் என்றும் ஆசைப்படுகிறாள். அவளுடைய தந்தை நேர்மைமிக்கவர். போலீஸ் அதிகாரியான அவர் ஊழல்களைக் கண்டிப்பவர் லஞ்சம் வாங் காதவர். அதனால் இதர உத்தியோகஸ்தர்களால் வெறுக்கப் படுகிறார். ஒர் ஏழைக்கு மனைவியாக நேர்ந்த அவர் மகள்