பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 67

வகை செய்த எழுத்து புதுக்கவிதை புத்துயிர்ப்பு பெறவும், இயக்க வேகம் கொள்ளவும் வழிவகுத்தது. 12 வருட காலம் வாழ்ந்த எழுத்துவின் இலக்கிய சேவை போற்றுதலுக்கு உரியது.

அதேசமயத்தில், க.நா.சுப்ரமண்யம் இலக்கியவட்டம் நடத்தினார். அது சுமார் ஒன்றரை வருடகாலம் தான் வாழ்ந்தது. எனினும், உலக இலக்கிய அறிமுகத்துக்கும், ஆழ்ந்த இலக்கிய ரசனைக்கும் அது உதவியது.

எழுத்து இலக்கிய வட்டம் இரண்டும் பின்னர் தோன்றிய சிற்றிதழ்களுக்கு உந்துசக்திகளாக விளங்கின என்று சொல்லலாம். இவ்வழியில் நடை 'கசடதபற’ குறிப்பிடத்தகுந்தவை. புதுமை யான சிறுகதைகள், இலக்கியவடிவங்கள் உத்திகளில் சோதனைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள், கவிதை, இலக்கிய விமர்சனம், நவீன நாடகங்கள், கலை - ஒவியம் பற்றிய கட்டுரைகள் - இப்படிப் பல வகைகளிலும் படைப்புப் பணிபுரிந்தன. இவை. இத்தன்மையில், நவீன தமிழ் இலக்கியத்துக்குத் தங்களால் புதுமைகள் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த திறமைசாலி இளைஞர்கள் தனித்தனியே பத்திரிகைகள் தொடங்கி அவரவர் ஆற்றலுக்கு ஏற்ற அளவில் செயலாற்றியுள்ளனர். ஞானரதம், அஃக், நீலக்குயில், சதங்கை, பிரக்ஞை, வானம்பாடி, கொல்லிப்பாவை, சுவடு, யாத்ரா, வைகை, சோதனை, பாலம், விஸ்வரூபம், பிரபஞ்சம், சாதனா, விழிகள், மானுடம், - இப்படி இதழியல் வரலாற்றில் இடம் பெறத்தக்க முயற்சிகள் பலவாகும். கண்ணதாசன் மாத இதழ் தனியாகக் குறிப்பிடத்தகுந்தது.

சிறுபத்திரிகைகள், இலக்கியம் என்று கூறி வெறும் கதைகள், கவிதைகளை மட்டுமே வெளியிடுவதில் திருப்தி அடைந்ததில்லை. தமிழ் நாடகம், தெருக்கூத்து, சமகால சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், அரசியல்தத்துவங்கள் போன்றவற்றிலும் அக்கறை காட்டலாயின. அவை சம்பந்தமான ஆய்வுகளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் கட்டுரைகளாகப் பிரசுரித்தன.

தனிமனித மனஉளைச்சல்கள், ஏக்கங்கள், கனவுகள் ரீதியான விஷயங்களைச் சில பத்திரிகைகள் வெளியிட்ட போதிலும், இந்தப்போக்கிற்கு எதிர்ப்பாக சமூகநோக்குடனும் மனித நேயத் தோடும் அரசியல் தத்துவப்பார்வையோடும் விஷயங்களைப் பிரசுரிக்கும் சிற்றிதழ்களும் அதிகமாகத் தோன்றி இலக்கியப்பணி புரிந்துள்ளன. வானம்பாடி, நீதி, தாமரை, செம்மலர், மகாநதி, சகாப்தம் முதலிய இதழ்கள் இவ்வகைப்பட்டவை.

இலக்கியக் கொள்கைகளில் எந்த இலத்தையும் பிரதி பலிக்காமல், இலக்கியம் என்ற நோக்குடனேயே புதிய எழுத்து வளர்ச்சிக்கு நீண்ட காலம் பணிபுரிந்துள்ளது தீபம் மாத இதழ். 23 வருடங்கள் வளர்ந்த தீபம் தற்காலத் தமிழ் இலக்கிய வளத்துக்குப்