பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வல்விக்கண்ணன்

தமிழ்நாட்டில் இவ்வேகம் தாமதமாகத் தான் 1940களின் பிற் பகுதியில்தான் தலைதுாக்கியது. இந்த நோக்கில் செயல்படும் பத்திரிகைகளும் தோன்றலாயின.

அதேசமயம் நாட்டில் செல்வாக்கு பெற்று வந்த திராவிடர் இயக்கமும் தங்கள் நோக்கில் இலக்கியமுயற்சிகளை வளர்ப்பதற் காகப் பத்திரிகைகள் நடத்தலாயினர். 1940களின் பிற்பகுதியிலும், 1950களிலும் பலப்பல சிற்றிதழ்கள் தோன்றின. பல விரைவிலேயே மறைந்தும் போயின. அவற்றிடையே நீண்டகாலம் வாழ்ந்து சாதனைகள் புரிந்த இதழ் என்று பொன்னியைக் குறிப்பிட வேண்டும்.

திராவிடர் இயக்கக்கொள்கைகளை வலியுறுத்தும் கதை களையும் கட்டுரைகளையும் வெளியிட்ட பொன்னி பாரதிதாசன் பரம்பரை என்று இளையகவிஞர்கள் பலரது படைப்புகளை அறிமுகம் செய்து, திறமையாளர்களை ஊக்குவித்தது. எழுத்தாளர் விந்தன் எழுதிய நாவல் ஒன்றும், டி. கே. சீனிவாசன் எழுதிய ஆடும், மாடும் நாவலும் பொன்னி மூலம் வாசகர் கவனிப்பைப் பெற்றன. விந்தன் முற்போக்கு நோக்குடன் மனிதன் பத்திரிகையை நடத்தினார். ஜனநாயகம், புதுமை இலக்கியம், தென்றல், வாரம் என்று இதழ்கள் முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களால் தொடங்கப் பெற்றன. அவை நீடித்து வளரவில்லை. ஆயினும் முற்போக்கு இலக்கிய மனநிலை நாட்டில் பரவி வந்தது.

இந்நிலையில் 1955ல் வ. விஜயபாஸ்கரன் சரஸ்வதியைத் தொடங்கினார். எட்டு வருடகாலம் அது பாராட்டத் தகுந்த வகையில் செயலாற்றியது. திறமையான படைப்பாளிகளின் கதை களையும், அயல்நாட்டுச் சிறுகதைகளின் தமிழாக்கம், சிறந்த உலக நாவல்களின் சுருக்கம், சிந்தனைவளம் நிறைந்த கட்டுரைகள், நல்ல கவிதைகள் முதலியவற்றை வெளியிட்டு அது இலக்கியப்பணி புரிந்தது.

1955ல் தொ.மு.சி. ரகுநாதன் திருநெல்வேலியிலிருந்து வெளி யிட்ட சாந்தி மாதஇதழும் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குத் தன் பங்கைச் செலுத்தியுள்ளது. தமிழில் சுயமான படைப்பு களுடன், மலையாளம் இந்திமொழிச் சிறுகதைகளின் தமிழாக்கத்தை சாந்தி வெளியிட்டது. நா. வானமாமலை, சாமி சிதம்பரனார், எஸ். ராமதிருஷ்ணன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். கட்டபொம்மு, மருதுபாண்டியர் போன்ற நாட்டுப் பாடல்கள் குறித்து ரகுநாதன் விரிவான கட்டுரைகள் எழுதினார்.

சரஸ்வதி காலத்திலேயே மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுத்து மாத இதழை இலக்கிய விமர்சன ஏடு ஆக நடத்தினார். தமிழ் இலக்கிய விமர்சனக்கட்டுரை வளர்ச்சிக்கு