பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கண்ணன் கட்டுரைகள் 65 தமிழ்ப்புத்தக வெளியீட்டுத் துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னோடியாக விளங்கி சாதனைகள் புரிந்துள்ள வை. கோவிந்தன் நடத்திய மாதப்பத்திரிகை சக்தி. ஒரு சில கதைகள், ஒன்றிரண்டு கவிதைகள், அறிவியல்கட்டுரைகள். சிந்தனைக்கு விருந்தாகும் பலவித விஷயங்களை, ரசமான துணுக்குகள் மற்றும் தகவல் களையும் சேகரித்து வழங்கிய மாதப் பத்திரிகை அது. ரீடர்ஸ் டைஜஸ்ட் பாணியில் வந்து கொண்டிருந்தது. தி.ஜர. என்று அழைக்கப்பட்ட திஜரங்கநாதன் பல ஆண்டுகள் சக்தியின் ஆசிரிய ராகப்பணியாற்றினார். பின்னர், எழுத்தாற்றலும் சிந்தனைத் திறமும் அதிகம் பெற்றிருந்த எழுத்தாளர் சுப. நாராயணன் அதன் ஆசிரியராக இருந்து நல்ல முறையில் அதை வளர்த்தார். சில வருடங்களுக்குப்பிறகு, அழகிரிசாமியும் தொ.மு.சி.ரகுநாதனும் பொறுப்பு ஏற்று சக்தியை வளர்த்தனர். அதன் கடைசி நிலையில் வ. விஜயபாஸ்கரன் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மணிக்கொடி மாதமிருமுறை இதழ் சிறுகதை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியது. பிறமொழிக் கதைகளின் மொழிபெயர்ப்பிலும் கவனம் செலுத்தியது. பின் வந்த பத்திரிகைகள் சுயமான சிறுகதைப் படைப்புகள், மொழிபெயர்ப்புகளுடன் புத்தக விமர்சனம், ஒரங்க நாடகம், கட்டுரை இலக்கியம் முதலியவற்றிலும் அக்கறை காட்டி வந்தன.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல்விழிப்பும், புதியபுதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற வாசகர் அவாவும், பரந்த பார்வையோடு வாழ்க்கையை, மக்களை, நாட்டை, உலகத்தைக் கவனித்துத் தாம் உணர்ந்தவற்றை எழுத்தில் பதிவு செய்யவேண்டும் எனும் எழுத்தாளர் ஈடுபாடும் இந்த வளர்ச்சிக்கு வகை செய்தன.

தனிமனித வாழ்க்கையை, மனிதரின் உளப் போராட்டங் களையும் உணர்ச்சிநாடகங்களையும் அழகாகப் பிரதிபலிப்பது மட்டுமே இலக்கியத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது. வாழ்க்கை அவலங்களையும் சமூகச் சீர்கேடுகளையும் எடுத்துச்சொல்வதும் இலக்கியத்தின் கடமையாகும். அத்துடன், இந்நிலைமைகள் நீடிப் பதற்கான அடிப்படைக்காரணங்களை மக்களுக்கு உணர்த்தி, அவர் களை விழிப்படையச் செய்வதும், அநீதிகளை எதிர்த்துப் போராட ஊக்குவிப்பதும் வளம்பெற்று வாழமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உண்டாக்க வேண்டியதும் இலக்கியத்தின் நோக்கங் களாகும். இதை வலியுறுத்துவது முற்போக்கு இலக்கியம்.

இதர இந்திய மொழிகளில் - முக்கியமாக வங்கம், மலையாளம், தெலுங்குமொழிகளில் - முற்போக்கு இலக்கிய முயற்சிகளும் சாதனைகளும் 1920கள் 30களிலேயே தோன்றி விட்டன.

வ-4