பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 வல்லிக்கண்ணன் தமிழ்ச்சிறுகதைக்கு இலக்கியத்தன்மையும் வளமும் சேர்த்துப் புகழ் பெற்றுள்ள எழுத்தாளர்கள் மணிக்கொடியில் தங்கள் படைப்புகளை வெளியிட்டார்கள். புதுமைப்பித்தன், கு.ப. ராஜ கோபால்ன், ந. பிச்சமூர்த்தி, மெளனி, சி.சு.செல்லப்பா, பி.எஸ். ராமையா முதலியவர்களின் கதைகள் குறிப்பிடத்தக்கவை.

மணிக்கொடிக்காரர்கள் தனிமனிதவாத, கலை, அரசியல் வாதிகள் தம் சமூகத்துப்பெருமை, சிறுமை, குணம் குறைகளை ஆராய்வதில் கவனம் கொண்டிருந்தார்கள். தம் சமூகத்தின் குடும் பத்தின் பழக்கவழக்க விவகாரங்களுக்கு அவர்கள் வெளியீடு காட்டினார்கள். மணிக்கொடிக்காரர்கள் எல்லோருமே சோதனைக் காரர்கள். ஒவ்வொருவர் சோதனை வெவ்வேறுவிதம். அவரவர் உலகம், பார்வை, வர்ணனை, தோரணை தனித்தனிவிதமானது என்று சி.சு.செல்லப்பா மதிப்பிட்டிருப்பது நினைவுகூரத் தகுந்தது. மணிக்கொடியின் தாக்கம் பின்னர் தோன்றிய இலக்கியப் பத்திரிகைகளில் வலுவாக இருந்தது. மணிக்கொடி எழுத்தாளர்கள் - முக்கியமாக, புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், மெளனி - பாதிப்பு பின்னர் தோன்றிய சிறுகதைஎழுத்தாளர்களின் நோக்கிலும் போக்கிலும் செயல்பட்டது.

இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது. இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடி இலக்கியம் என்பது வாழ்க்கையைக் காண உதவுகிற சாளரம் என்று இவ்இலக்கியவாதிகள் கருதி னார்கள். மனித உளப்போராட்டங்களையும், உணர்ச்சி நாடகங் களையும், ஆன்மீகத்தேடல்களையும் தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய வாதிகள் அழகாகவும் ஆழமாகவும் எழுத்தில் சித்திரித்துள்ளனர். 1936ல் சிறுகதை மணிக்கொடி நின்று போனதற்குப் பிறகு, முப்பதுகளின் கடைசிக் கட்டத்தில் தோன்றிய ஒன்றிரு இலக்கியப் பத்திரிகைகளும், 1940களில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கிய இதழ்களும் மணிக்கொடியின் பாதையைப் பின்பற்றின. மணிக்கொடி எழுத் தாளர்கள் காட்டிய வழியிலேயே பெரும்பாலும் கதைகள் படைக்கப்பட்டன.

1937 - 38ல் கநா. சுப்ரமண்யம் நடத்திய சூறாவளி, 1940களில் தோன்றிய கலாமோகினி, கிராமஊழியன், தேனி ஆகிய மறுமலர்ச்சி இலக்கியஇதழ்களும், 40களின் மத்தியில் இரண்டு வருட காலம், க. நா. சுப்ரமணியனை ஆசிரியராகவும், சி. சு. செல்லப்பாவைத் துணைஆசிரியராகவும் கொண்டு வளர்ந்த சந்திரோதயம் மாதம் இருமுறைப் பத்திரிகையும் மணிக்கொடியின் பாதிப்பைப் பெற்றிருந்தன.

1930களின் பிற்பகுதியில் தோன்றிய சக்தி 1940களில் வித்தி யாசமான ஒரு பத்திரிகையாக, நல்ல தரத்துடன் வளர்ந்து வந்தது.