பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வல்லிக்கண்ணன்: ாற்றத்தகுந்த முறையில் தொண்டாற்றியது. புதுமைக்கதைகள், , குறுநாவல்கள், கவிதைகளோடு, பிறமொழி எழுத்தாளர் களின் அறிமுகம், எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு, மற்றும் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பிரசுரித்துள்ளது. திறமையான இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் வளர்ச்சிக்கும் தீபம் துணைபுரிந் துள்ளது.

கணையாழியும் தற்கால இலக்கியவளர்ச்சிக்கும், புதிய தலைமுறை எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும் பாராட்டத் தகுந்த விதத்தில் பணியாற்றியுள்ளது. 25 வருடங்களுக்கும் மேலாகவே செயல்பட்டு வரும் இந்த இலக்கியப்பத்திரிகை தமிழில் குறுநாவல் வளமாக வளர்வதற்கு இப்பவும் உதவுகிறது.

1980களில் தோன்றி வளர்ந்த அநேக சிற்றிதழ்கள், ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்தன்மை கொண்டு, இலக்கியப் பணிபுரிந்துள்ளன. சில, தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. ழ, கவனம், படிகள், லயம், இனி, புதுயுகம்பிறக்கிறது, மண், நட்புறவுப்) பாலம், எதிர்வு, பயணம், நிஜம், காலச்சுவடு, 1 , முன்றில், விருட்சம், கனவு, நிகழ், அன்னம்விடுதூது - இப்படிப் பல சிற்றிதழ்கள். இவற்றில் நிகழ், கனவு, விருட்சம் போன்ற ஒரு சிலவே தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பணிகள் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவை. *

பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு உதவக்கூடிய வகையில் ஆழ்ந்த விஷயங்களை வெளியிடும் சிற்றிதழ்கள் என்று பேராசிரியர் நா.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி அவர் மறைவுக்குப் பிறகு அவரது மாணவர்கள் தொடர்ந்து நடத்தும் நாவாவின் ஆராய்ச்சி, பாளையங்கோட்டையிலிருந்து வருகிற மேலும் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை சீரிய முறையில், கனமான விஷயங்களை வெளியிட்டுள்ளன.

சிற்றிதழ்கள் சக்தி நிறைந்த வலிய சாதனங்கள் ஆகும். புதிய எழுத்துக்கு, புதிய புதிய சோதனைகளுக்கு அவை இடம் தருகின்றன. புதிது புதிதாகத் திறமையாளர்களைக் கண்டுகொள்ள அவை உதவுகின்றன. திறமையுள்ள படைப்பாளிகளின் வளர்ச்சிக்கு அவை பெரிதும் துணைபுரிகின்றன. கனமான சிந்தனைகள், வளமான கருத்துக்கள், அறிவு வளர்ச்சிக்குத் துணைபுரியும் ஆய்வுகள் முதலியவற்றை வெளியிட்டு கலை இலக்கியங்களைச் சிற்றிதழ்கள் வளம் செய்கின்றன. இதன்மூலம் வாசகர்களின் தரம் உயரவும் அவை வழிவகுக்கின்றன. காலத்தினுTடு நிலைத்து நிற்கும் சாதனைகளாகத் திகழவேண்டும் என்ற லட்சியதாகத்தோடு நடத்தப்படுகிற பத்திரிகைகள் மொழிக்கும் இலக்கியத்துக்கும் பெருமை சேர்க்கக் கூடியவையாகும்.