பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர் கதைகள்

தொட ர்கதைகள் வணிகநோக்குப் பத்திரிகைகளின் ஜீவநாடியாக விளங்குகின்றன. எல்லாக் காலத்திலுமே பத்திரிகைகள், தங்கள் வளர்ச்சிக்காக வாசகர்களின் தொடர்ந்த நீடித்த ஆதரவைப் பெறுவதற்காகத் தொடர் கதை பிரசுரிப்பில் கருத்தாகவே இருந்திருக் கின்றன. இருந்து வருகின்றன.

இந்த நூற்றாண்டின் முப்பதுகள் நாற்பது களில், பத்திரிகைகள் ஒரே ஒரு தொடர்கதை பிரசுரித்தால் போதும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தன. காலஓட்டத்தில் வாசகர் களை இழுத்துப் பிடித்துவைத்துக் கொள்வதற்கு இரண்டு கதைகள், மூன்று தொடர் அம்சங் களை வெளியிட வேண்டும் என்று உணர்ந்து செயல்பட்டன.

இப்போது இரண்டு மூன்று தொடர் கதைகள் மட்டுமில்லாது, ஸ்தலம்புராணத் தொடர் (திருத்தல யாத்திரை பயணக்கதை, எவராவது ஒரு ஹீரோ (வீர நாயகர், கீர்த்தி நாயகர், திரைப்பட வெளிச்ச நாயகர் அல்லது நாயகி) வரலாற்றுத்தொடர் என்று அம்சங்கள் ł_f{R} ரொப்பும்படி பத்திரிகைக்காரர்கள் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.