பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கண்ணன் கட்டுரைகள் 93 ஒளி வெள்ளம் புரளும் இடமாய், மிக அதிகமான ஜனங்கள் கூடிக் கலைகிற பெருவெளியாய், கடல்புறம் காட்சி தருகிறது.

இரவு நேரம். பத்துமணிக்கு மேலிருக்கும். அதிகமான ஒளிவிளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருக்க, ஒலிபெருக்கும் குழாய் வாய்கள் ஊமையாய் நிற்க, பிரசங்க மேடை அரவமற்று ஆளற்றுக் கிடக்க விசித்திரமாய் என் பார்வையில் பட்டது.

ஏதோ ஒரு கட்சியின் கூட்டம் முடிந்து, கும்பல் கலைந்து போய் வெறிச்சென்று ஆகிவிட்ட தோற்றம் அது. அந்த வெறுமையும், வீணாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த எண்ணற்ற விளக்குகளின் பேரொளியும் கண்களை உறுத்தின. நாகரிக இடம் உயிரற்ற சூன்யமாக மாறிவிட்டால் இப்படிக் காட்சி தரலாம் என்று மனசில் உறுத்தல் ஏற்படுத்திய தோற்றம் அது.