பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் கட்டுரைகள் $35

ஒவ்வொன்றும் வெவ்வேறு காலத்தில் முடியவேண்டும். ஒன்று முடிகிற சமயத்தில் மற்றொன்று புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இப்படி அமைந்தால்தான் வாசகர்கள் தொடர்ந்து தம் பத்திரிக்கையில் இன்ட்டரஸ்ட் காட்டுவர் என்பது வணிக நோக்கில் பத்திரிகை நடத்துகிறவர்களின் நம்பிக்கையும் நடைமுறையுமாக இருந்துவருகிறது.

எந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டினாலும் அதில் தொடர்கள் கதைகள் இதர அம்சங்கள், அளவுக்கு அதிகமாக இருப்பதாகவே படுகிறது. இதனால் எப்பவாவது காசு கொடுத்துப் பத்திரிகை வாங்குகிற உதிரி வாசகருக்கு, அந்த இதழுக்காக அவர் கொடுத்த காசு தெண்டம் என்ற உணர்வே ஏற்படுகிறது, ஏனெனில், தொடர்கள் அவருக்குப் பயன்படுவதில்லை. தலையும் இல்லாத வாலும் இல்லாத விஷயங்களில் எங்கோ ஒரு சிறுபகுதியை எப்பவோ படிப்பதனால் வாசகர் என்னத்தைப் புரிந்துகொள்ள இயலும்?

ஆனால், பத்திரிகை நடத்துகிறவர்கள் எப்பவாவது பணம் கொடுத்து ஏதோ ஒன்றிரண்டு இதழ்களை வாங்கிப் படிக்க ஆசைப் படுகிற உதிரி வாசகர்களைக் கவனத்தில் கொள்வதே இல்லை.

அப்படி வாங்கும் எண்ணமும் இயல்பும் உடையவர்களால் தங்களுக்குக் கணிசமான லாபம் இல்லை; எனவே சென்னை ரிக்ஷாக்காரர்கள் பாஷையில் அவர்கள் வெறும் சாவு கிராக்கிகள் தான் என்று பத்திரிகைக்காரர்களின் மனக்குறளி கூவிக்கொண்டி ருக்கும் போலும்!

அப்படியே திடீர்னு நெனச்சிட்டு எப்பவாவது பத்திரிகை வாங்குகிற கேஷவல் பய்யர்கட அந்தப் பத்திரிகையில் ஒரு சுவைகண்டு அடுத்த இதழையும் அதுக்கு அடுத்ததையும் அப்படித் தொடர்ந்தும் அந்தப் பத்திரிகையை வாங்க ஆசைப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு உரிய முறையில் சரக்குகள் தயாரித்துப் பக்கங்களை ரொப்புகிற மாஸ்டர்களான திறமை சாலிகள்தான் வணிகப் பத்திரிகைகளில் ஊக்கத்தோடும் உற்சாகத் தோடும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நோக்கில் உதவக்கூடிய எழுத்து மன்னர்களையும் மன்னிகளையும் விடாது கவுரவித்து, தொடர்கதைகள் எழுதும்படி செய்து வருகிறார்கள்.

தொடர்கதைக்கு என்று சில விசேஷமான உத்திகள் உள. அவற்றைத் திறமையாகக் கையாண்டு வெற்றிபெறுகிற பேனா மன்னர்கள் நிரந்தரத் தொடர்கதைப் பிரம்மாக்களாக பத்திரிகை களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிக அதிகமாக வேலை வாங்கப் படுகிறார்கள். ஒரு பத்திரிகை மாறி இன்னொரு பத்திரிகை - ஒரேசமயத்தில் இரண்டு அல்லது அதுக்கும் அதிகமான பத்திரிகை களில் எழுதும் வாய்ப்பு அவர்களைத் தேடி வருகிறது.