பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 97

கல்கி தனது சரித்திரத் தொடர்கதைகளில் அருமையான கேரக்டர்களை உருவாக்கி உலாவ விட்டிருக்கிறார். அப்படி மறக்க முடியாத கேரக்டர் ஒன்றைக்கூட, அவருக்குப் பின் வந்த சரித்திரக் கதை எழுத்தாளர் எவரும் இதுவரை படைக்கவில்லை என்பது ரசிகர்கள் சிலரது அபிப்பிராயம்.

என்றாலும், சரித்திரத் தொடர்கதைகளை விரும்பிப் படிக்கிற வாசகர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். சரித்திர நாவல் என்பது ஒரு பம்மாத்து வேலை என்றேன். சரித்திர காலக் கதா பாத்திரங்கள் சிலசில இடங்களில் சில வரலாற்று நிகழ்ச்சிகள் இந்நாவல்களில் காணப்படுகின்றன என்பது உண்மைதான். வரலாற்று ரீதியான உண்மைகளைப் பார்க்கிலும் அளவுக்கு அதிகமான அளப்புகளே இவற்றில் இடம் பெறுகின்றன. இவை வரலாற்று உடைதரித்த மர்ம மற்றும் துப்பறியும் நாவல்களாகவே &_6ᏑᎶfröᏡí.

தாமே உண்மையான வரலாற்று நவீனம் எழுதுகிறவர் என்று வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படுத்துவதற்காக, சில எழுத் தாளர்கள் தேசப்படம், களங்களின் பிளான், சரித்திர நூல்களின் மேற்கோள்கள், பெயர்ப்பட்டியல்கள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதும் தொடர்களின் நியதியாக வளர்ந்து வருகிறது.

சரித்திரத்தொடர்கதையும் தமிழ்சினிமா போல தனக்கென சில ஃபார்முலாக்களைக் கொண்டிருக்கிறது. ரசிகப் பெருமக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி படாதிபதிகள் கதாநாயகியை மழையில் நனையவைத்தும் (அருவியில், குளத்தில் அல்லது ஏதாவது நீர்நிலையில், குழாயடியில் கூட குளிக்க வைத்தும் நடிகையின் உடல் அழகுகளை செக்ஸியாகக் காட்டி மகிழ்கிறார்கள். படுக்கை யறைக் காட்சி கட்டாயத் தேவை. கதாநாயகனும் நாயகியும் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் இன்றியமையாத விஷயங்கள்.

மிக அதிகமான வாசகர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிற சரித்திரத் தொடர்கதை நாவலாசிரியர் சாண்டில் யனும் இத்தகைய மசாலாக்களை தனது நாவலில் அங்கங்கே தாராளமாக விரவிவைக்கிறார் குளிர்சுனையில், பூம்புனலில், வெள்ளிநீர் அருவியில் இளவரசி குளிப்பதும் மறைவிலிருந்து மன்னன்மகன் பார்ப்பதும் அவர் தொடர்கதைகளில் தவறாது வருகிறது. படுக்கைஅறையில் அவள் படுத்திருக்கும் கோலத்தை ரசமாக வர்ணிப்பதற்காகவே ஒரு தனி அத்தியாயம். பெண்ணின் முன்னழகையும் பின்னழகையும் ஸைடழகையும் வர்ணிப்பதற் கென்றே சாமர்த்தியமாக உருவாக்கப்படும் சந்தர்ப்பங்கள் பல. ஒரே நாவலில் இந்த ரகக் காட்சிகள் திரும்பத் திரும்ப வர்ணிக்கப் படுகின்றன.

வ-6