பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேபி 103

திருக்கும். இனியும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் முனங்கும். அது அதனுடைய உரிமை!

'டிபன் பண்ணிக்கிட்டிருந்தேன். அதுதான் நேரமாகிவிட்டது' என்றார் பேராசிரியர்.

மூன்று கண்ணாடி டம்ளர்களை ஒன்றாகச் சேர்த்து உராய்ந்து தொடர் ஒலிகளை எழுப்பியது போல் கலகலெனவும், கிணிகிணி எனவும், கடகட வென்றும் சிரிப்பொலி சிதறினாள் பேபி.

'என்னம்மா விஷயம்? ஏன் இப்ப இவ்வளவு சிரிப்பு’ என்று விசாரித்தார் பரமசிவம்.

திடுமெனப் பாய்ந்த சிரிப்பைச் சடக்கெனக் கொன்றாள் அவள். சொன்னாள்: 'நீயா அப்பா டிபன் பண்ணினே? அம்மா பண்ணி வைத்தாள். அதாவது ரெடி பண்ணினாள். நீ ஈட் பண்ணினே! என்னவோ நீயே அடுப்பு முன்னிருந்து டிபன் தயார் பண்ணியது போல் பேசுறிறே!’

'சரியான தின்னிப் பன்னி! என்று சீறியது கைலாசம் மனக்குறளி. 'இதன் மூளையும் பன்னி மூலைதான்!'

பரமசிவம் சிரித்து வைத்தார். அதில் அசட்டுத்தனம் அதிகம் மின் வெட்டியதா? அருமையான பெண்ணைப் பெற்றுவிட்ட பெருமை ஒளி வீசியதா? என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

'கைலாசத்துக்கும் கொஞ்சம் பஜ்ஜி எடுத்து வாம்மா’ என்று சொன்ன ஆசிரியர், 'இவர்தான் கைலாசம். நல்ல ரசிகர்’ என்றும் அறிமுகம் செய்தார்.

உருவிய வாட்கள்போல் பளிரெனப் புரண்டு பாய்ந்தன இரண்டு கருவிழிகள். அவற்றின் ஒளிக்கூர்மையால் தாக்குண்ட கைலாசத்தின் விழிகள் மண்மீது படிந்தன. அவை மீண்டும் மேலெழுந்து பேபியின் முகத்தின் பக்கம் திரும்பியபோது, அம்முகம் மலர்க் குவியல்போல் வண்ணமும் வனப்பும் பெற்றுத் திகழ்வதைக் கண்டன.

"கொஞ்சம்னு சொன்னா எத்தனை? ரெண்டா, மூணா, எத்தனை? சில பேருக்கு ஒரு டஜன் கூட கொஞ்சமின்னுதான் தோணும்' என்று கொஞ்சும் குரலில் வார்த்தையாடி நின்றாள் அவள்.

'போடி வாயாடி! உன்னோடு பேச முடியாதம்மா என்னாலே. அம்மாகிட்டே போய்க் கேளு. தந்ததை வாங்கிவா' என்று கூறி மகளை அனுப்பி வைத்தார் தந்தை. உடனேயே டொங்கும் பெருமையோடு சொன்னார்: 'பேபி இப்படி வளர்ந்து