பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1O4 வல்லிக்கண்ணன் கதைகள்

விட்டாளே தவிர, அவள் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறாள். விளையாட்டுப் பிள்ளை. வேடிக்கைப் பிரியை...'

சொல்லாத எண்ணங்கள் அவர் உள்ளத்தில் நீந்தி, பெற்ற மனசில் களிப்புத் திவலைகளை அள்ளித் தெளித்தன என்பதை அவர் முகபாவமும், உதடுகளில் விளையாடிய குறுநகையும் எடுத்துக் காட்டின.

அவர் ஈஸிசேரில் சாய்ந்தார். கைலாசம் ஒரு நாற்காலியில் அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டான். பரமசிவத்தின் பின் பக்கத்தில்தான் அடுப்பங்கரை முதலிய பகுதிகள் இருந்தன.

பேபி ஒரு தட்டில் பஜ்ஜி எடுத்து வந்தாள். அவள், வந்த அழகு ரசிக்க வேண்டிய ஒரு தோற்றமாகத்தான் இருந்தது. தன்னைப் பார்த்து அவன் ரசிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட குமரி நடையில், அசைவில், முகத்தில் நயங்கள் சேர்க்கத் தவறினாளில்லை.

அப்பா, அம்மா கணக்குப்படி கொஞ்சம் என்றால் அஞ்சு என்று தெரியுது. நான் போய் கொஞ்சம் பஜ்ஜி கொடு அம்மா. என்றேன். உனக்காடீ என்று எரிந்து விழுந்தாள். இல்லேம்மா, லார்வாளைத் தேடி ஒரு ஸார் வந்திருக்கிறார்; அந்த ஸாருக்காக நம்ம அப்பாஸார் வாங்கிட்டு வரச்சொன்னார் என்றேன். அம்மா தந்தது இதோ' என்று நீட்டினாள். அடிக்கடி அவள் கள்ள விழிப் பார்வை கைலாசத்தின் பக்கமே ஒடி ஒடி மீண்டது.

'போக்கிரி!' என்று செல்லமாகக் கூறிய தந்தை பஜ்ஜியைக் கைலாசத்திடம் கொடுத்து உபசரித்தார். அவனும் சம்பிரதாய வார்த்தைகளை முனங்கி விட்டு அதை ஏற்றுக் கொண்டான்.

"பேபி, காபி கொண்டு வந்து கொடு’ என்றார் பரமசிவம்.

'ஐயோ! வீணாப் போச்சே' என்று பேபி விரல்களை உதறவும், ‘என்னது என்னம்மா?’ என்று தந்தை பதறினார்.

'இல்லே, நீ சொன்ன வசனத்தை வெறும் கவிதையாகவே நீட்டியிருக்கலாமே! மை டியர் பேபி, எடுத்து வா காபி என்றால் நன்றாக இராது? அது வீணாகப் போச்சே!' என்று சொல்லிச் சிரித்தாள் அருமை மகள். கைலாசத்துக்கு இனிய பார்வையைப் பரிசளித்து விட்டு, ஸ்டைல் நடை நடந்து போனாள்.

தந்தைக்குப் பெருமையாவது பெருமை! தமது திருப் புதல்வியைப் பற்றிய புகழுரைகள் பேசாமல் இருக்க முடியுமா அவரால்? பேசினார், பேசினார் கவிதை வரிவுரைமாதிரிப் பேசினார். பேபி சின்னக் குழந்தை; அவள் பேச்சிலும் செயல்களிலும் அற்புத ரசம் பொங்கித் துளும்பும். அவள் எஸ்.எஸ். எல்.ஸி. பாஸ் செய்துவிட்டாள். மேலும் படிக்க