பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 வல்லிக்கண்ணன் கதைகள்

கைலாசம் அவளை ஒரு கணம் பார்த்தான். லேசாகச் சிரித்தான், 'அழகான பெண் ஆடிக் குதிப்பது அருமையாகத் தான் இருக்கிறது. பேபி நாட்டியம் ஆடினால் இன்னும் ஜோராக இருக்கும் என்றுதான் எண்ணினேன்... '

ஒய்யாரப் பார்வை ஒன்றை அவன் மீது புதித்துவிட்டு உள்ளே ஓடினாள் பேபி. பின் பக்கமிருந்து வந்துகொண்டிருந்த பரமசிவத்தின் மேல் மோதிக் கொள்ளத் தெரிந்தாள்.

‘என்னம்மா இது? ஏன் இந்த ஒட்டம்? கைலாசத்தைப் பார்த்து விட்டா இப்படி ஒடி வருகிறே? பயமா இல்லை, வெட்கமா? என்ன கண்ணு?’ என்று கொஞ்சினார் அவர்.

‘போ அப்பா!' எனக் குழறிவிட்டு பேபி ஒரு அறைக்குள் மறைந்து கொண்டாள்.

பேபி சரியான விளையாட்டுப்பிள்ளை, வெறும் குழந்தை என்கிற விஷயமாகப் பத்து நிமிஷம் சுவாரஸ்யமாகப் பேசினார் பேராசிரியர். பிறகு இலக்கிய விஷயங்களில் சஞ்சரிக்கலானார்.

அறையினுள் மறைந்த பேபி 'பூரண கிரகணம்' ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எட்டி எட்டிப் பார்த்தும், எதிர் வந்து நின்றும், ஏதேனும் காரணம் கற்பித்துக் கொண்டு அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தும் கைலாசத்தின் மீது இனிய நோக்கு உகுத்து அவன் பார்வையைப் பெற்று மகிழ்வுற்றாள்.

அன்று மட்டுமல்ல. அவன் அவர்கள் வீடு தேடி வந்த ஒவ்வொரு சமயத்திலும்தான். கைலாசமும் அடிக்கடி அங்கு வரலானான். பேராசிரியரோடு உரையாடிக் கொண்டிருப்பதால் எவ்வளவோ லாபம் கிட்டுகிறது; புதிய புதிய விஷயங்களை அறிய முடிகிறது; பயனுள்ள பொழுது போக்கு என்றெல்லாம் அவன் நெஞ்சொடு. கூறிக் கொள்வதை வழக்கமாக்கினான். அங்கே அவனை அவ்விதம் இழுக்கும் இனிய காந்தம் ஒன்று உலவுகிறது எனும் உண்மையை அவன் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.'

தமது அறிவொளியாலும், பேச்சுத்திறத்தாலும் வசீகரிக்கப்பட்டே அவன் அடிக்கடி வருகிறான் என்றுதான் பேராசிரியர் நம்பினார். ஆகவே சுவையாகச் சம்பாஷித்தார். பேச்சோடு பேச்சாக, "பேபி அப்படிச் செய்தாள். இதைச் சொன்னாள். விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டாள்" என்றும் பெருமையோடு அறிவிப்பார்.

ஸ்ார்வாள் இலக்கியக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களையும், உணர்வுக் குழப்பங்களையும், உளப் போராட்டங்களையும், மிகத் தெளிவாகப் புரிந்து, நுணுக்கமாக ஆராய்ந்து,