பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 19

சரியாத்தான் சொல்லி வச்சிருக்காரு" என்று அவர் எண்ணிக் கொண்டார்.

- ஆனா இந்த நெஞ்சு அதாகப்பட்டது மனசாட்சி, ஏன் உடனுக்குடனே சுடுவதில்லை? அநேகம் பேருக்கு சுடுவதே இல்லை போல் தெரியுதே! சில பேருக்கு மட்டும் குழிப் பிள்ளையை எடுத்து மடியிலே வச்சு அழுகிற கணக்கிலே, அதுவும் புள்ளை மக்கி மண்ணாகி எலும்புகள் கூட உருமாறிப் போவதற்குப் போதுமான காலம் ஆகிவிட்ட பிறகு, தன்னெஞ் சறிந்து பொய்த்ததற்காக இத்தன்னெஞ்சு திடீர்ச்சுடுதல் பண்ணுவானேன்?...

இந்த ரீதியிலே மூக்கபிள்ளையின் மனதின் ஒரு பகுதி எண்ண வளையங்களை அதிரப் பண்ணவும், "சீ மூதி, நீ சும்மா கிட' என்று அவர் அதன் மண்டையில் ஓங்கி அடித்தார்.

மூக்கபிள்ளை டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்ததில்லை. அவர் அதிகமாகப் பயணம் போனதே கிடையாது அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம் என்கிற மாதிரி, அவருக்கு சொந்த ஊரான சிவபுரம்தான் சொர்க்கம் ஆகும்.

பரபரப்பு மிகுந்த கடைகளில் சாமான்கள் வாங்கி விட்டு, பில்படி பணத்தை கொடுக்காமல் அவர் நைசாக நழுவியதில்லை. அல்லது நோட்டுக்கு சில்லறை கொடுக்கிறபோது ஒட்டல் காரனோ, ஷாப்காரனோ அல்லது வேறு எவனுமோ, கவனப் பிசகாக அதிகப்படியாக ஒரு ரூபா ரெண்டு ரூபா தாள்களை கொடுத்து விடுகிறபோது, நம்ம அதிர்ஷ்டம் என்று எண்ணி அதிை அமுக்கிக் கொண்டு வந்ததில்லை அவர். நின்று, பில்படி பணம் இவ்வளவு; பாக்கி இவ்வளவு தான் உண்டு; ஆனால் தரப்பட்டுள்ள தொகையோ இவ்வளவு இருக்கு என்று எடுத்துச் சொல்லி அதிகப்படியாக வந்ததை திருப்பிக் கொடுத்து விட்டுதான் அவர் வெளியேறுவார். 'ஊரான் காசு நமக்கென்னத்துக்கு?’ என்ற பாலிசி அவருடையது.

ஆகவே பொதுச்சொத்து எதையும் மூக்கபிள்ளை சுரண்டியதில்லை. தனி நபர் எவரையும் அவர் ஏமாற்றியதில்லை. பின்னே அவருடைய மனசாட்சி குரங்குத்தனம் பண்ணுவானேன்?

சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் சுத்த சுயம்பிரகாசச் சுகவாசியாக வாழ்ந்த மூக்கபிள்ளை மற்றவர்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டவராக நடந்து வந்தார். சமூக ஜீவியாக அவர் அந்த ஊரில் வசித்து வந்தபோதிலும் சமூகத்தோடு ஒட்டி உறவாட விரும்பாதவர் போல் விலகியிருந்தார். சொந்தக்காரர்கள் வீடுகளுக்குப் போவதில்லை; மற்றவர்களோடு நெருங்கிப்