பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜாலி அண்ணாச்சி 215

குலுக்கும் மினுக்கும் தளுக்கும் - ஐயே, சகிக்கலே, எவளோ நாடகக்காரி போலிருக்கு. சுந்தரமாம் சுந்தரம் - துடைப்பக் கட்டை! அந்தச் சனியனோடு கொஞ்சிக் கிட்டு இருக்க வேண்டியது தானே? என்னை ஏன் கல்யாணம் பண்ணி, குடித்தனம் நடத்தத் துணியனும்?...'

அவள் லேசில் அடங்குவதாக இல்லை.

பரமசிவம் விழித்தார். மெதுவாக விஷயத்தை கிரகித்துக் கொண்ட போதிலும், யார் வந்திருக்கக் கூடும் என்று புரிந்து கொள்ள இயலவில்லை அவரால்.

'எனக்கு அப்படி யாரையும் தெரியாதே. ஏமாத்துக்காரி எவளாவது நைசாக வந்து நாகடமாடி, திருடிக்கிட்டுப் போக வந்திருப்பாள்' என்று அவர் விளக்க முனைந்தார்.

சாந்தா அழுது கொண்டே சீறினாள். .

‘என்னை ஏமாத்த வேண்டாம். அவ தான் சொன்னாளே, ரொம்ப நாள் சிநேகம்னு. அந்த மூதேவி கூடவே நீங்க ஜாலியாக இருங்க. நான் எங்க அம்மா விட்டுக்குப் போறேன்' என்று முணுமுணுத்தபடி, அவள் சீலை துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைக்கலானாள்.

'இதேதடா பெரிய இழவாப் பேச்சு!’ என்று புலம்பிய படி பரமசிவம் திண்ணையில் அமர்ந்தார். 'எனக்கு எவளும் சிநேகமும் இல்லை, மண்ணுமில்லை. எவள் இப்படி துணிந்து வந்து ரகளை பண்ணியிருப்பாள்?' என்று யோசித்து மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தார். -

சிறிது நேரம் சென்றிருக்கும். அவருடைய நண்பர்கள் பட்டாளம் அவரை தேடி வந்தது. 'என்னய்யா இது அதிசயமாயிருக்குதே! ஜாலி அண்ணாச்சி உம்மணா மூஞ்சியா உட்கார்ந்திருக்காகளே? என்ன விசயம்?’ என்று நீட்டி முழக்கினார்கள்.

'போங்கய்யா! மனுசன் படுற வேதனையை புரிந்து கொள்ள முடியாமல் இதென்ன கேலியும் கூச்சலும்?' என்று சிடுசிடுத்தார் அ1ெ1.

'என்ன அண்ணாச்சி திடீர்னு புதுப்பாடம்?' என்று கிண்டல் பண்ணினார் ஒருவர். .

'சுந்தரம் செய்த வேலை சரியான அதிர்ச்சி மருந்தாக அமைஞ்சிருக்குன்னு தெரியுது”'என்று இன்னொருவர் சொன்னார்.