பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 வல்லிக்கண்ணன் கதைகள் சிறுகுளம் என்பது வெறும் பட்டிக்காடு. பள்ளிக்கூடம் என்ற பேருக்கு திண்ணையில் ஒரு அண்ணாவி சில பிள்ளை களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சில பேரில் ஒருவனாக விளங்கும் பேறு பூவுப் பயலுக்குக் கிடைத்ததில்லை. அவன் தந்தை பலவேசம் பெரிய வீட்டில் வண்டிக்கார னாக வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந் தான். “பயல் படிச்சு எந்த உத்தியோகம் பார்க்கப் போறான்! அவனுக்கு எதுக்குப் படிப்பு?’ என்று ஒரேயடியாக முடிவு செய்ததுதான் "தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி ஆகும். பையன் ஊர் சுற்றுவது, வயல்காடுகளில் திரிவது, மரங் களில் ஏறுவது, கிட்டிப்புள் விளையாடுவது போன்ற அலுவல் களை உற்சாகமாகச் செய்து வந்தான். அங்கேயே இருந்தால் அவன் உருப்படாமல் போவான் என்று அப்பன் கருதினான். 'பட்டணத்துக்கு வந்து மட்டும் நான் என்ன உருப்பட்டு விட்டேன்? உருப்படக்கூடியவன் எங்கே இருந்தாலும் உருப் படத்தான் செய்வான். உருப்படாமல் போற கழுதை எந்தச் சீமைக்குப் போனாலும் உருப்படாததுதான் என்று பிற் காலத்தில் பூவுலிங்கம் அநேக தடவைகள் எண்ணியது உண்டு. இந்த அறிவு, அவனுக்கு ஆதி நாட்களில் இவ்வாறு வேலை செய்தது இல்லை. அந்தக் காலத்தில் அவன் அந்த தரித்திரம் பிடித்த பட்டிக்காட்டை விட்டு வெளியேற வசதி கிட்டியதைப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதினான். வறண்ட பய’ ஊரைவிட்டு நாகரிகத்தின் சிகரமான பட்டணத்துக்கே போக வாய்ப்பு கிட்டியது. கிடைத்தற்கரிய ഖ-18