பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரும் ஒருத்தியும் திருமணமாகி வந்த நாள் முதலே சஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்க வில்லை. 'இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பய ஊரு. இதுவும் ஒரு ஊரா?' என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது. ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவன். எட்டாம் வகுப்பு வரை அங்கே பள்ளியில் படித்தவள். நாகரிகம் பயின்றவள் என்ற நினைப்பு. அவள் கல்யாணமாகி வந்த ஊர் சின்ன கிராமம். கடை வீதி கிடையாது. ஒரே ஒரு கடைதான் இருந்தது. இஷ்டப் பட்ட போது வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கித் தின்ன ஆசைப்பட்டால், அதற்கு உதவும்படியாக ஒரு மிட்டாய் கடை உண்டா? ருசிருசியா வடை, காப்பி என்று சாப்பிட ஒரு ஒட் டல் இருக்குதா? சினிமா தியேட்டர் இல்லை. இதுவும் ஒரு ஆணரா? சஞ்சிதம் எப்பவும், எல்லோரிடமும் இப்படி குறை கூறிக் கொண்டிருப்பாள். அவளுக்கு கணவன் வீட்டாரையும் பிடிக்கவில்லை. என்ன சனங்க நாகரிகம் தெரியாதவங்க! இவ்விதம் மனசில் சொல்லிக் கொள்வாள்.