பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 232 சுயம்பு அரண்டு போனான்; பாவம். 'இல்லே, அப்படி எதுவும் நடக்கலே’ என்றான். அவனுக்கு தொண்டை அடைத்தது. பேச்சு சரியாக எழ ఖిథు $6ు.

  • பொறுக்கி! பொம்பளை பொறுக்கி!' என உறுமி அவனை உலுக்கினான் முரடன்.

'அவன் முழிச்ச முழியே அதைக் காட்டுச்சே!” என்றாள் அவள். முரடன் அவன் சட்டைப்பைக்குள் கைவிட்டான். ஒரு கவர் கிடைத்தது. எடுத்துப் பார்த்தான். இருபது ரூபாய் இருந்தது. ஒரு பத்து ருபாய் தாளும், இரண்டு ஐந்து ரூபாய் தாள்களும். - இது என் பணம்’ என்றான் சுயம்பு. 'சரிதாம் போடா!' என்று அவனைப் பிடித்துத் தள்ளி னான் முரடன். ஊளையிடாம இடத்தை காலி பண்ணு. வாயைத் திறந்தயோ, உனக்குத்தான் டேஞ்சர். இவளைக் கற்பழிக்க முயன்றேன்னு போலீஸ்லேபு டிச்சுக் கொடுப் பேன்’ என்றான். - சுயம்புவின் பயம் அதிகரித்தது. அவன் கீழே விழாமல் சமாளித்து நின்றதே பெரிது. அழுகை வேறு வந்தது. சே, எவ்வளவு அவமானம். இதுபோதும்; மேலும் அவமானம் சம்பாதிக்க வேண்டாம் என்று எண்ணியபடி நடந்தான். அவளும் தடியனும் கூட்டாளிகள்னு தோணுது என்றது அவன் மனம். -எப்படி இருந்தால் நமக்கென்ன! நம்ம பணம் போச்சு. மானமும் போச்சு. ‘அனுபவம் புதுமை!’ என்ற நினைப்பு வெடித்தது அவ னுள். எதிர்பாராதது! இதுவரை நடக்காதது!’ -கேவலம், கேவலம்! வாயைத் திறந்து இதை யாரிடம் சொல்ல முடியும்? பெருமையாகப் பேசப்படுவதற்கு உரிய அனுபவமா இது? சுயம்புலிங்கம் பெருமூச்செறிந்தான். ‘கையில் காசில்லை. நடந்து நடந்தே ஊர் போய்ச் சேர வேண்டிதுதான். ரெண்டரை அல்லது மூணு மணி நேரம் ஆகும்’ என்றது அறிவு. [...] குங்குமம் - 5-9-82