பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வல்லிக்கண்ணன் கதைகள் "வெயில் கூட அழகாகத்தான் இருக்கிறது!” என்று பட்டது அவனுக்கு. - வானம், கழுவிப் போட்டது போல், அழுத்தமான நீல திறத்தோடு பளிச்சிட்டது. விண்ணிலும் மண்ணிலும், அவன் அதுவரை கண்டிராத அதிசயப் புதுமை இணைந்து கிடந்தது போல் தோன்றியது. இயற்கை புத்துயிரோடும் புது வனப் புடனும் காட்சி தந்து கொண்டிருப்பதாக அவன் கருதி னான். அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டுத் தெருவில் நடக்க ஆரம்பித்த விநாயகமூர்த்தியின் உள்ளத்தில் புதிய தோர் குதுகல உணர்வு பொங்கியது. நிறைந்தது. துளும்பி வழியலாயிற்று. இந்த நேரத்தில் நான் உயிரோடு இருப் பதே ஒரு பெரும் பாக்கியம் என்று படுகிறது ... என்ன முட் டாள்தனம் செய்ய ஆசைப்பட்டேன் நான்!” என்று எண்ணி னான். தானாகச் சிரித்துக்கொண்டு துள்ளல் நடையில் சென்ற அவனை வேடிக்கையாகப் பார்த்து நின்ற சிறுவன் ஒருவன், 'குட்மார்னிங் சார்!’ என்று சலாமிட்டான். அப்பையனின் பரட்டைத் தலையும் அழுக்கேறிய உட லும், நேற்று என்றால், விநாயகமூர்த்திக்கு அருவருப்புத் தந்திருக்கும். ஏசல் வீசிவிட்டோ, அல்லது அலட்சியமா கவோ, தன் வழியே போயிருப்பான். இவ்வேளையில் அவ் வாறு செய்யவில்லை, அவன். குட்மார்னிங்' வெரி வெரி குட்மார்னிங்!” என்று உற்சாகமாகச் சொன்னான். சிறுவன் குதித்துக் கொண்டு ஓடலானான். "ஏய் சோமு: அவர் சலாம் போட்டார்டா. என்னிடம் சண்டைக்கு வர வில்லை: என்று அவன் மகிழ்ச்சியோடு கூச்சலிட்டது,