பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சம் 7



பியும் திரித்தும் குறைத்தும் கூறியிருக்கலாம். ஆனால், எல்லாரும் சொல்லக் தவறாத விஷயம் ஒன்று இருந்தது.

'ஒன்டிப்புலியா பிள்ளைக்கு விஷ ஜந்துக்களிடம் பயமே கிடையாது; அவரிடம் எதோ ஒரு சக்தி இருக்கிறது. எவ்வளவு பெரிய மலைப்பாம்பாக இருந்தாலும் சரி; எலும்பை நொறுக்கி ஆளை அப்படியே விழுங்கி விடும் பெரிய பெரிய பாம்புகளாக இருந்தாலும் சரிதான் -அவர் கூப்பிட்டால் வந்துவிடும். நாய்க் குட்டி போல் வாலை அசைத்துக்கொண்டு அவர் காலடியிலே கிடக்கும். அவர் மிகவும் செல்வமாகப் போற்றுகிற ஒரு பெரிய மலைப்பாம்பு இருக்கிறது. அவர் ஏவுகிறபடி எல்லாம் ஆடும்'.

இந்த விஷயம் இன்ஸ்பெக்டரின் மனத்தில் உறுத்தியது. 'ஒண்டிப் புலி மாந்தரிகம் கற்றவரோ' என்று கேட்டார் சிலரிடம்.

"கற்றிருக்கலாம். அவருடைய தாத்தா பெரிய மந்திரவாதி. இந்த ஜில்லாவிலேயே அவரைத் தோற்கடிக்கக் கூடிய மத்திரவாதி எவனும் இருந்ததில்லை. கீர்த்திபெற்ற மலையாளத்து மத்திரவாதி யெல்லாம் அவர் முன் தோற்றுத் தலைகுனிந்து இடிப்போனார்கள். அவர் பிழைப்புக்காக அதைக் கற்கவில்லை. சும்மா கலையாகக் கற்று வைக்கலாமே என்று படித்துத் தேர்ச்சி அடைந்திருந்தார். அவர் விட்டுப்போன சுவடிகள் புத்தகங்கள் மூலம் இவரும் ஏதாவது கற்றிருப்பது சாத்தியம்தான். இவரைத் தேடி மலையாளத்து மத்திரவாதி ஒருவன் அடிக்கடி வந்து போவது உண்டு” என்று தெரியவந்தது,

ஒண்டிப்புலியா பிள்ளை கடின சித்தம் உள்ளவர். ஆளைப் பார்த்தால் அவரது குணம் தெரியவே தெரியாது. சில சமயங்களில் அவர் நடந்துகொள்கிற விதத்தைக் கவனித்தால், இந்த மனுஷனா இவ்வளவு ஈவு இரக்கம்