பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 வஞ்சம்



பக்கத்து தோட்டத்தில் ஒங்கி வளர்ந்து நின்ற வாதநாராயண மரத்தின் கிளையிலிருத்து ஓர் ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தது.மறுபடியும் அலறிவிட்டுப் பறந்து விட்டது!

எல்லைக்குநாதருக்கு ஏனோ பண்ணையாரின் தனி ரகச் சிரிப்பொலிதான் நினைவுக்கு வந்தது.

மாடசாமி! இந்த வாதமடக்கி மரத்தின் கொம்புகளை வெட்டிப்போடு என்று எத்தனை தரம் சொன்னேன்? நாளைக்கு முதல் காரியமா அதைக் கவனி... ஆந்தை வந்து அடைஞ்சுக்கிட்டு... சே!' என்று சினக்குரல் காட்டினார் அவர்.

'ஆகட்டும், எசமான்!' என்றான் மாடசாமி.

“இப்பதான் வேலை ஒண்னுமில்லையே. எல்லாரும் வீட்டுக்கே போகலாம் " என்று அனுமதி கொடுத்து அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர். ரொம்ப நேரம் வரை அவர் மனசு சரிப்படவேயில்லை.


மிகவும் விசித்திரமாகத்தான் தோன்றியது.....

அந்த வீட்டிலே அதுவரை விஷ ஜந்துக்களின நடமாட்டம் இருந்ததே இல்லை. கட்டுவாக்காலி வந்த தினத்திற்குப் பிறகு அடிககடி ஒனறு இல்லாவிட்டால் ஒரு பூச்சி விஜயம் செய்வது சகஜமாகிவிட்டது.

விஷ ஜந்துக்களின் திருவிழா நடப்பதற்குக் கொடியேற்றிவைத்து முதல் ஆஜர் கொடுத்த பெருமையை 'கண்டுத் தெறுக்கால்' எடுத்துக்கொண்டதால் இந்த விசேஷ விழாவின் 'முள்ளுப் பொறுக்கிச்சாமி' அதுதான். "திருவிழா முதல் நாளிலே தெருக்களைப் பார்ப்பதற்கு அப்படி ஒரு சாமி வருமே, அது மாதிரி தேளுகதான்