பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முத்து 8 கழுத்து மாதிரி நீண்ட தொண்டையைச் சுற்றிக் கிடக்த முத்துமாலை அழகியின் புன்னகைபோல் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. போட்ட புதுசில் அப்படி. பிறகு நாளாக ஆக மங்கி வந்தது. அப்புறமென்ன! தெய்வ யானே கோயில் விளக்குப் போல மினுக்கு மினுக்கென்று அழுது வழிந்தது. 'இது கல்முத்து இல்லை. அதுதான் மங்கிப் போச்சு’ என் அ அடிக்கடி முனங்குவாள் பூரீமதி. பண்ணையார் எதுவுமே சொல்ல மாட்டார். அனுபவஸ்தர்களிடம் காட்டி அருமையான முத்துக்கள் என்று பாராட்டுப் பெற்றவைகளைத்தான் மாலையாகக் கட்டச் செய்திருக் தார். பின்னே அவை ஒளியிழந்து போனதேன் கட்டிப் போட்டு சரியாக ஒரு வருஷம் கூட ஆகவில்லையே! "சில முத்துக்கள் இப்படித்தான் காலப் போக்கிலே மங்கிப் போகும் போலிருக்கு என்று தம் மனதைச் சமாதானப்படுத்த முயன்ருர் ஆவர். நாளுக்கு நாள் முத்து ஒளியிழந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது. அது என்ன கோளாருே அவருக்குப் புரியவில்லை. அன்று அதிகாலையில் எழுந்து வேப்பங்குச்சியும் கையுமாகக் திண்ணையிலமர்ந்து பல் துலக்கும் காரியத் தில் ஈடுபட்ட வெயிலுகந்தநாத பிள்ளை திடீரென முத்து மாலையைப் பற்றி எண்ண நேர்ந்தது. அதற்குரிய அவ சியத்தை உண்டாக்கியது வீதி வழியாகச் சென்ற ஒரு பெண்ணின் கழுத்திலே கிடந்த முத்து மாலைதான். . மேற்கு திசையிலிருந்து கிழக்குத் திக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள். காலை இளம் வெயில் அவளுக்குத் தனிமெருகு பூசியது. ஆரோக்கியத்தின் அழகு கிலேயமாக விளங்கிய அவள் உடல் உழைப்பினுல் உறுதி பெற்றிருந்தது. இயற்கை வெளியிலேயே தங்கி