பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைகள் புத்தகங்களைப் படிக்கிறவர்களில் பலர் பொதுவாக இது நல்லாயிருக்கு இது நன்றாக இல்லை பரவால்லே’ என்று சொல்வதோடு நின்று விடுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றில் நல்லன குறித்து - பொது வாக, தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றி - ரசிகர்கள் தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக்கூற ஆசைப்படுகிறார்கள். அநேகர் பேச்சோடு பேச்சாக அவை பற்றியும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கடிதங்களில் எழுதுகிறார்கள். படித்த புத்தகங்கள், அவற்றின் நயங்கள், சிறப்புகள் பற்றி சில வரிகள் எழுதி வைப்பதில் மகிழ்ச்சி

அடைகிறார்கள்.

இவர்களில் அநேகர், தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால், விமர்சகர்கள் ஆக வளர்ச்சி பெற முடியும். ஆனால், அப்படி எவரும் வளர்வதில்லை.

பத்திரிகைகள் பல - தினத்தாள்களும், வார ஏடுகளும், மாத சஞ்சிகைகளும் - புத்தக மதிப்புரைப் பகுதி வெளியிடுகின்றன. நீ ண் ட காலமாகவே வெளியிட்டு வருகின்றன. இவற்றுக்காக மதிப்புரை எழுதித் தரக்கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் அநேகர் வாசகர்களாகவும், எழுத்தாளர்

களாகவும் இருப்பவர்கள் தான்.

மதிப்புரை என்பது, பொதுவாக, ஒரு புத்தகத்தைப்

பற்றிய அறிமுகம் தான். புதிதாக வந்திருக்கிற புத்தகம் இப்படி இருக்கிறது; அது எதைப் பற்றி

வாசகர்களும் விமர்சகர்களும் 133