பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ரமணி கூடவாவில்லை என்று எல்லோருக்கும் தெரிந்தது. சுந்தரேசனுக்கு இருந்த துயரம் கங்குகரை இல்லே. அவரைப் போல அது விஷயமாகத் துயரம் அடைந்தவர்கள் மற்றும் இருவர் தாம். ஒருத்தி ராஜம், மற்ருெருவன் பாஸ்கரன். மற்றவர்களுக்கு என்ன வந்தது: உற்ருரும் உறவினரும் இதையெல்லாம் பார்க் துப் பரிகாசமாகப் ப்ேசிக்கொண்டார்களே தவிர வேறில்லை. பூரீநிவாசன்கூட அவ்வளவாகப் பாராட்டவில்லை. o காலம் எதை எதிர்பார்த்தும் நிற்பதில்லை. காமாட்சி அம்மா ளின் அபரக் கிரியைகள் ஒரு பெரிய கல்யாண வைபவம்போல நடந்தேறின. ரமணி இல்லாதது ஒன்றுதான் குறை. ஆனல் அது ஒன்றே போதாதா? சில நாட்களில் மனேவி மக்களுடன் ஊருக்குப் புறப்பட்டார் சுந்தரேசன். பதினேந்து நாட்களாக் மனத்தில் போட்டுப் புரட்டிக் கொண்டிருந்த பிரச்னையை மெல்லத் தம் மனேவி லட்சுமியிடம் வெளியிட்டார். ராஜத்தைப் பொறுத்த விஷயங்தான் அது. அவளைத் தம்மோடு கிராமத்திற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்பது அவர் எண்ணம். ஆனல் லட்சுமி அந்த ஏற்பாட்டிற்கு லேசில் சம்மதிக்கவில்லை. என்னவோ காரணங்கள் எல்லாம் கூறி ஆட்சேபித்தாள். அவர் அதையெல்லாம் காகில் போட்டுக்கொள்ளவே இல்லை. தம் எண்ணத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார். லட்சுமி மெல்லத் தன் ஒரகத்தியிடம் சொல்கிற பாவனேயில் நீநிவாசன் காகில் போட்டாள் இந்த விஷயத்தை, " அந்தப் பெண் இங்கேயே இருந்து கொண்டிருந்தால் ஒரு நாள் சமணி வர்க்கட்டும்; நல்ல காலம் பிறக்க வழி உண்டாகும். அதைவிட்டு எங்கேயோ இடிவிழுந்த மூலையிலே இருக்கிற கிருஷ்ண ராஜபுரத்திற்கு அவளே அழைத்துக் கொண்டுப்ோய் வைத்துக் கொள்வதாமே! இது எதிலே சேர்ந்த காரியம்? வரவாப் பெரிய வருக்குப் புத்தி மழுங்கிக்கொண்டே வருகிறது-"என்ருள். இந்தச் சொற்களே ஆதார்மாகவைத்துக்கொண்டு தமையனிடம் பேசினுன் பூநீநிவாசன். அவர் அவன் வார்த்தைகளேயும் ஏற்றுக் கொள்ள வில்லை. அவனுவது மறுபடியும் வரவர்வது? இவள் இங்கே இல்லை என்று தெரிந்தாலாவது வருவான். நீ ஏதாவது புத்திமதி கூறித் திருத்த வகை உண்டு. அப்படி கேருகிறவரையில் இவள் கிராமத் கிலேயே இருக்கட்டும்- என்றர். கடைசியில் அவர் வாதங்தான் வென்றது. ராஜத்தின் அபிப் பிராயத்தை யாரும் கேட்கவேயில்லே. கேட்டால்தான் அவள் ன்ன்ன சொல்லியிருக்கப் போகிருள்? கணவன் இல்லாத இடம் எந்த இடமாக இருந்தால்தான் என்ன? சாதனின் பட்சம் ஆயிரம் 2