பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மீது கின்றுகொண்டிருக்கிறேன். எனக்குள் இருக்கும் சக்தி துடி யாய்த் துடிக்கிறது. ரீகிவாசன் மட்டும் இப்போது என் எதிரே தென்பட்டானுனுல் நான் அவனே என்ன செய்வேன் தெரியுமா? மகா பாபி சண்டாளன்! துரோகி நாசகாலன்...' அவர் இருதயம் விம்மி விம்மித் தணிந்தது. கண்கள் தணல் போன்று காட்சி அளித்தன. அவற்றின் தீட்சண்யத்தைத் தாங்க மாட்டாமல் பாஸ்கரன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். பற்களே நற கறவென்று கடிப்பதும் பெருமூச்சு விடுவதுமாக நின்றிருந்த சுந்தரேசன் மீண்டும் சொன்னர், “எப்போதும் ராஜத்தைக் கண்காணித்து வருகிறேன் என்று சொன்னேனே, அந்த ரீதியிலே சகஜமாக இந்த விஷயத்தை கான் அறியவில்லே. அப்படி அறிய நேர்ந்திருந்தால் முளையி லேயே கிள்ளியிருப்பேன். காரியம் இவ்வளவுக்கு மிஞ்சிப் போயிராது. தற்செயலாக நேர்ந்துகொண்ட விஷயமானதால் தான் வெள்ளம் வங்த பிறகு அணே போட்ட கதையாகிவிட்டது. 'உத்தேசம் ஏதும் இன்றித்தெருத்தெருவாகச்சுற்றும் சுபாவப் படி வீதியோடு போய்க் கொண்டிருக்கையில் ஒரு குதிரை வண்டி யில் ராஜம்மட்டும் தனியாகச்செல்வதைக்கண்டேன். உடனே கிடுக் கிட்டு நின்று யோசித்தேன். உன் ஆதரவில் இருந்துவரும்.அவள் தன்னங்தனியே குதிரை வண்டியிலே போகவேண்டிய அவசியம் என்னவென்பதே புரியவில்லை. வண்டி போகும் இடம் உத்தேச மாகப் புரிந்தது. தொலைவிலிருந்து நான் கைதட்டிக் கூப்பிட்ட தெல்லாம் வியர்த்தமாகப் போய்விடவே பேதை போலக் குடல் தெறிக்கச் சிறிது தூரம் வண்டி செல்லும் கிசையிலே ஒடினேன். வண்டி ஒரு கிருப்பத்தில் கண்ணுக்கு மறைந்தது. இப்படி ஒடி வேகமாகச் செல்லும் குதிரை வண்டியைப் பிடிப்பதென்பது சாத்தியம் அல்ல என்று மனத்திற்குத் தோன்றிற்று. வண்டி யைப் பிடிக்க வண்டியிலேதான் போகவேண்டும் என்ற முடி வோடு சுற்று முற்றும் பார்த்தேன். ஒரு வண்டி கூடக் கண் அக்குத் தெரியவில்லை. சரி, வண்டியைத் தொடர்ந்து ஒடிக் கொண்டே இருப்போம்;வழியில் வண்டி கிடைத்தால் அதில் ஏறிச் செல்வோம்’ என்று மீளவும் வேகமாக ஓடத் தொடங்கினேன். அப்போது என்னே ஒரு மாதிரியாகப் பார்த்த கண்கள் பல. என் பைத்தியக்காரத் தோற்றமும் ஒட்டமும் மற்றவர்களுக்கு எப் படித் தோன்றியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? வண்டி சென்டிால் பக்கங்தான் போகிறது என்று உத்தேச மாகத் தோன்றியபடியால் நானும் சென்டிால்ே நோக்கியே ஒடிக், கொண்டிருந்தேன். வயோதிகம், களைப்பு, பசி முதலியவைகள் எல்லாம் என்னேவிட்டுப் பறந்தே போய்விட்டன. ராஜம் குதிரை