பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கடவுளே! இப்போது நான் என்ன செய்வேன்? நடப்பது நடக்கட்டும் என்று பேசாமல்அந்த ரெயிலிலேயே நான்போயிருக்க வேண்டும். அடுத்தாற்ாோல ஏதாவது ஒரு பெரிய ஜங்க்ஷன் இருந்தால் அதிலே இறங்கி இந்தப் பக்கம் திரும்பிச் செல்கிற ரெயி விலே ஏறி இருக்கவேண்டும். அல்லது அந்த ஜங்க்ஷனிலிருந்தே வேறு வழியாகப் பம்பாய் செல்ல வசதி இருந்தால் அப்படிப் பேர்யிருக்கவேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு...உ.ம்...எப் போதுமே பெண் புத்தி பின் புத்திதானே? அடாடா!...அவர் எனக்காக ஸ்டேஷனிலே காத்திருந்து பார்த்துவிட்டு ஏமாற்றத் துடன் போயிருப்பார். இனிமேல் அவரை நான் எங்கே காணப் போஒறேன்! அவ்வளவுதான்! கண்ணிலான் பெற்றிழந்தான் என்பது என் விஷயத்தில் முற்றும் பொருத்தமாகிவிட்டது. ஐயோ!! அழுகை மூண்டுவந்தது அவளுக்கு. அவள் இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டிருந்த போது, யாரம்மா ? இங்கே ஏன் கிற்கிருய்?" என்று கேட்டுக் கொண்டே ஒருவர் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தார். சுமார் முப்பது வயது இருக்கும். கட்டுத் தளராத சரீரம். சுமாரான அழகு. கடினமும் கபடமும் நிறைந்த உள்ளத்தின் சாயல் முகத் தில்ே கிழலாடிக்கொண்டிருந்தது. ர்ே மல்கிய கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் ராஜம். அவள் நிலைகண்டு பதறிப்போனவர் போல, அடாடா ஏன் அம்மா? ஏன் வருத்தப்படுகிருய்? என்ன நேர்ந்தது உனக்கு?” என்று பரிவோடு கேட்டார் அவர், மூண்டு வந்த அழுகையைப் பிரயாசையுடன் அடக்கிக்கொண்டு தன் கில்ேமையை விவரித்தாள் அவள்.

பூ இவ்வளவுதானே! இதற்காக ஒருத்தர் வருத்தப்படுவார் களோ? இதெல்லாம் சர்வ சகஜம்ான காரியங்கள்தாம். நீயாவது பெண். உன்போன்றவர்கள் அவசரத்திலே இப்படிப்பட்ட தவறு கள் செய்வது இயல்பு. கற்றறிந்த மேதாவிகளான எத்தனையோ ஆண் பிள்ளைகள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவிட்டு விழிப்பதை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன். இதற் காக யாராவது வருத்தப்படுவார்களா? என்ன பிரமாதம்? கிரும் பிச் செல்கிற ரெயிலில் ஏறிச் சென்ருல் போயிற்று-”

அவருடைய சொற்கள் அவளுக்குச் சற்றே தெம்பை அளித் தன. சிறிது நிதானத்துடன் பேசலானுள்.

நீங்கள் சொல்வது சரிதான். ஆல்ை.” "ஆணுல்' :திரும்பிச் செல்வதற்கு டிக்கெட் வாங்கப் பணம் இல்லேயே' 'அப்படியா?" - "ஆமாம். எட்டு ரூபாய்தான் இருக்கிறது.'