பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வேறு வீசத் தொடங்கிற்று. மலேயைப் பெயர்த்தெறிந்து விடக் கூடிய வலுவான அந்தக் காற்றுச் சுழன்று சுழன்று அடித்த போது, ஒரு முறை ஸ்டேஷன் அறைக்குள் வேகமாகப் புகுந்தது. மழைத் தண்ணீரை உள்ளே வாரி இறைத்துவிட்டு விளக்கையும் அ&ணத்து விட்டுப் போயிற்று. ராஜத்தின் உள்ளம் கலவரத்தால் கடுக்கித் தவித்தது. தீப்பெட்டி இருக்கும் இடம் தெரிந்தாலும் விளக்கை மீண்டும் ஏற்றலாம், அதுவுக் தெரியாது. கிரு கிரு வென்று அவள் அறைக்குள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். அப் போது பட படவென்று யாரோ கதவைத் தட்டும்சத்தம் கேட்டது. 44. ஆபத்தில் உதவி ராஜம் பதை பதைத்துப் போனுள். கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று அவள் யோசிக்கவே இல்லை. கட்டாய மாக அந்த ஸ்டேஷன் மாஸ்டராகத்தான் இருக்கும் என்பதை உறுதியாக மனத்தில் கொண்டாள். ஆம்! சந்தடி அற்ற அந்த இடத்திலே அவரைத் தவிர வேறு யார் அப்போது வரக்கூடும்? பிரளயமே வந்துவிட்டாற் போன்ற பயங்கரமான சூழ்நிலை. மை இருட்டு; அண்டமே அதிரும்படியான பேரிடிகள் ; கண்ணேப் பறித்து விடுவன போல விண்னேக் கிழித்துக்கொண்டு மின்னும் மின்ன்ல்கள் ; ஓவென்ற பேரிரைச்சலுடன் கூடிய ஜோ வென்ற மழை ஆபத்து, சம்பத்து என்ருல் என் என்று கேட்க, சாதியற்ற இடம்; எட்டடி அகல நீளம் உள்ள குறுகிய அறை; அந்த மனி தனே மூச்சு விடாமல் பட படவென்று கதவைத் தட்டுகிருன். அவள் என்ன செய்வாள்? செய்வகை அறியாது எண்சாண் உடம்பையும் ஒரு சாணுக ஒடுக்கிக்கொண்டு ஒரு முலையிலே போய் ஒண்டிக் கொண்டாள். அவள் அப்படிச் செய்ததனுல் அந்த மனிதன் விட்டுவிடுவான ? - அவன் மணமாகித் தாாமிழந்தவன். போக்கிரித்தனம் அவ னது பிறவிக் குணம். அந்த ஊருக்கு மாற்றலாகி வந்து சில தினங்கள்தான் ஆகின்றன. அக்கம் பக்கம் அதிக மனிதர்கள் இல்லையென்றலும், இருக்கும் இரண்டொருவருக்குக் கூட அவனேப் பற்றி அதிகம் தெரியாது. அவன் பெயர் அத்சுதன். சென்னையில் இருக்கும் ஒரே ஒரு கங்கையைத் தவிர வேறு சுற்றம் அற்றவன்-இவ்வளவே பிறர் அறிந்தவை. அபூர்வமாக எப்பொழுதாவது இரண்டொருவர் இறங்கும் அந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷனில் காட்டுமிராண்டிகளைப்போன்ற ஜனங்களுக்கு எதிராக அழகே உருவான மடமங்கை ஒருத்தி தன் னந்தனிமையில் இறங்கித் திக்குத் திசை புரியாமல் பிளாட்பாரத் தில் கின்றுகொண்டிருப்பதிைத் தொலைவிலிருந்து பார்த்ததும்ே